திமுகவை பற்றி யார் பேசினாலும் அவர்களது குடும்பத்தில் கலவரம் வரும் என மறைமுகமாக ராமதாஸை விமர்ச்சித்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் ,ஸ்டாலினை போய் நான் சந்திப்பதா எனக்கு அவமானமாக உள்ளது என ஒருவர் கூறினார் இன்று அவர்களைப் பார்த்து சந்தி சிரிக்கிறது, திமுக மோசமான கட்சி, திமுகவை பற்றி யார் பேசினாலும் குடும்பத்தில் கலவரம் வரும், அடிதடி நடக்கும் ஒரு மாதிரியான வித்தியாசமான கட்சி திமுக திமுகவை பழித்து பேசாதீர்கள் என மறைமுகமாக ராமதாஸை விமர்ச்சித்தார்
தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கேள்விப்பட்டு முதல்வர் துடிதுடித்து போய்விட்டார் உடனடியாக நடவடிக்கை எடுத்தார் ,24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தார் ,ஆனால் பொள்ளாட்சி சம்பவத்தில் சும்மா இருந்த எடப்பாடி இப்போ போராட்டம் செய்கிறார் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்
இதையும் படிங்க: 'யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது?' பெண்களுக்கு கைப்பட கடிதம் எழுதிய விஜய்
இதையும் படிங்க: ‘அவலத்தின் உச்சம்...’ஸ்டாலின் போஸ்டர் மீது தாக்குதல்... மூதாட்டியை தேடி அலையும் போலீஸ்..!