அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து பாஜகவின் 16 பேர் அடங்கிய நாடாளுமன்ற குழுவு தான் முடிவு செய்யும்.கூட்டணி பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது என பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா தெரிவித்துள்ளார்.
இன்று கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் இந்து கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் வக்ப்பு வாரிய சொத்துக்களாக உள்ளது. இதேபோல் நாடு முழுவதும் இந்த பிரச்சினை உள்ளது. இதற்காகத்தான் வக்பு வாரியத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதை தமிழக அரசு எதிர்த்து சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. இதனை நாங்கள் கண்டிப்பதாக கூறினார்.

தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையை எச் ராஜா விமர்சனம் செய்த எச்.ராஜா, கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வியை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வில்லை, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிகள் மரத்தடியில் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்காகத்தான் ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது . இந்த புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு எதிர்த்து வருகிறது .இதனால் தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை என்றார். திமுகவினர் பல்வேறு பள்ளிகள் நடத்துவதாகவும் அங்கு தமிழ் கற்பிக்கப்படுவது இல்லை என குற்றச்சாட்டினார்.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்படுகிறதா தவெக... கள நிலவரம் என்ன?

பாஜக - அதிமுக கூட்டணி குறித்து கேட்டகப்பட்ட கேள்விக்கு, “கூட்டணி குறித்து நாங்கள் கூறுவதற்கு ஒன்றுமில்லை. கூட்டணியை இறுதி செய்வது முடிவு செய்வது அனைத்தும் 16 நபர்கள் கொண்ட பாஜக தலைமை என்றும் அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை நாங்கள் செய்வோம்” என எச் ராஜா தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் பிரச்சனையை பிரதமர் தீர்த்து வைப்பார் என்றும்,இரட்டை மடி வலை பயன்படுத்துவது தொடர்பாகத்தான் இருநாட்டு மீனவர்கள் இடையே பிரச்சனை உள்ளது . இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என எச். ராஜா தெரிவித்தார்.

நேற்று கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் கிறித்துவ மத பிரச்சாரம் செய்வோர் வழங்கிய பைபிள் புத்தகத்தை இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குருமூர்த்தி வாங்கி குப்பைத் தொட்டியில் வீசினார் .அதற்காக நேற்று குருமூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குருமூர்த்தி கைது செய்யப்பட்டதை கண்டிப்பதாகவும் மருத்துவமனைகளில் மதமாற்றம் செய்வது தொடர்பான புத்தகங்களை வழங்கிய நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அது நடந்தால் இ.பி.எஸிடம் முதல்வர் பதவியை ஒப்படைப்பாரா மு.க.ஸ்டாலின்..? பாயிண்டைப் பிடித்த அதிமுக..!