சீனாவில் பரவத் தொடங்கியுள்ள எச்எம்பிவி வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது. பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் எச்எம்பிவி வைரஸ் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறதா, மக்கள் கூட்டம் கூட்டமாக சிகிச்சை எடுக்க என்ன காரணம் என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் இல்லை. எச்என்பிவி வைரஸ் பாதிப்பு, பரவலை மத்திய அரசும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் இந்தியர்கள், சீனா வழியாகவும், சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், இந்தியர்களையும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் விமானநிலையத்தில் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்திய பின் அனுப்புகிறார்கள்.
ஆனால், இந்தியாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எச்எம்பிவி வைரஸால் பாதிக்கப்பட்ட 3 பேருமே வெளிநாடுகளுக்கு செல்லாதவர்கள், அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு செல்லாதவர்கள். அப்படி இருக்கையில் இந்த ப இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த எச்எம்விபி வைரஸ் குழந்தைகளையும் அதிலும் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், முதியோரையும் அதிகமாகப் பாதிக்கும், நுரையீரல் தொற்று, சுவாசத் தொற்று போன்றவற்றை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு எந்தமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என இதுவரை தெளிவாக தகவல் இல்லை.

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ இந்த எச்எம்விபி வைரஸ் புதிய வைரஸும் அல்ல, வழக்கத்துக்கு மாறான வைரஸும் அல்ல. எச்எம்பிவி வைரஸ் புரிந்து கொள்ள புதிரான வைரஸ் கிடையாது. இந்த வைரஸை குளிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பார்க்கிறோம். குறிப்பாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் வரை இந்த வைரஸ்கள் பரவல் இருக்கும்.
இந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டால் இருமல், சளி, ஜலதோஷம், காய்ச்சல் இருக்கும். சில நேரங்களில் மட்டும்தான் பாதிப்பு தீவிரமடைந்து ஆக்சிஜன் அல்லது வென்டிலேட்டர் சிகிச்சை வரை செல்லும்.
இதையும் படிங்க: சீனாவில், கொரோனாவை போல் அச்சுறுத்தும் புதிய வைரஸ்: "பீதி வேண்டாம்" என்கிறது, இந்தியா

இந்த வைரஸுக்கு எதிராக எந்த தடுப்பு மருந்தும் இல்லை. ஆதலால், இந்த வைரஸைப் பற்றி முதலில் பதற்றப்படுவதோ அல்லது தவறான தகவல்களை கேட்டு அச்சப்படுவதோ, தேவையில்லாத எச்சரிக்கைகளை செய்வதையோ நிறுத்த வேண்டும். இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஒன்றே போதுமானது. சீனாவில் இந்த வைரஸை எளிதாக கையாண்டு அனுபவம் இருந்திருக்கலாம், ஆதலால் நான் பொறுமையாக கண்காணிக்க வேண்டும். எச்எம்பிவி வைரஸ் உருமாறும் தன்மை கொண்டால்தான் அது தீவிரமாக மாறும்.
இந்த வைரஸிலிருந்த குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுக்க வேண்டும். குறிப்பாக இதுபோன்ற குளிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் இன்ப்ளூயன்சா, ஆர்எஸ்வி, ஆடினோவைரஸ் போன்ற பாதிப்புகள் வரலாம். ஆதலால், குழந்தைகளுக்கு சிறிய காய்ச்சல், ஜலதோஷம், இருமல் இருந்தாலே பள்ளிக்கு அனுப்பாமல் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். அப்போதுதான் மற்ற குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்க முடியும். பாதிப்பின் தீவிரத்தன்மையிலிருந்து பாதுகாக்க முடியும். உங்கள் குழந்தைக்கு சிறிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ் பிற குழந்தைகளுக்கு பலவீனமான குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆதலால் காய்ச்சால் இருந்தால் பள்ளிக்குச் செல்வதைத் தடுப்பது, முகக்கவசம் அணிந்து வெளியே செல்வது, கைகழுவுதல் உள்ளிட்ட நல்ல பழக்கங்கள் ஆகியவை இந்த வைரஸ் பரவுவதில் இருந்து தப்பிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

ஐஎம்ஏ அமைப்பின் தலைவர் பிரபுகுமார் சாலகாலி கூறுகையில் “ இந்த எச்எம்பிவி வைரஸ் நுரையீரல் பாதிப்பு, சுவாச பிரச்சினை, ப்ளூ காய்ச்சலுக்கு வரும் அறிகுறிகளை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் குழந்தைகள், பெரியவர்களுக்கு பாதிப்பு அதிகமாகும். ஆனால், தற்போது நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறுகள் பிரச்சினை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எச்சரிக்கை உணர்வு அவசியம். எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் மக்கள் சுயமாக மருத்துவம் செய்தலும், மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்து மருத்துவரின் ஆலோசனையை நாடுவது நல்லது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: துபாயில் கதிர் ஆனந்த்... காத்திருக்கும் அமலாக்கத்துறையினர்… தலைமை செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு…ரெய்டு பின்னணி என்ன?