கே.பாலகிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 72 வயது ஆக உள்ளதால், தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவோரை வலுக்கட்டாயமாக கைது செய்யும் நடவடிக்கை தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. இதனிடையே, தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்திவிட்டீர்களா என்று முதலவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார். இந்த கருத்து தமிழக அரசியல் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடான முரசொலி விமர்சித்து எழுதியுள்ளது.
இதையும் படிங்க: சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? - மு.க.ஸ்டாலினை சீண்டிய கே.பாலகிருஷ்ணன்!
‘இது ‘தோழமைக்கு’ இலக்கணம் அல்ல’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்த தலையங்கத்தில், அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா அவர் இருக்கிறார்? முதலமைச்சரை எப்போதும் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் அவர் விழுப்புரத்தில் எதற்காக வீதியில் போய் நின்று இப்படிக் கேட்க வேண்டும்? தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார். பின்னர், அவரே போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் கேட்கிறார். இதில் எது ஒரிஜினல் கே.பி.? என சரமாரியான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கூட்டணி கட்சி என்பதால் உங்களை போராட்டமே நடத்தக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் போராட்டமும் நடத்திவிட்டு, போராட்டம் நடத்த அனுமதிப்பது இல்லை என்று சொல்வது கூட்டணி அறமும் அல்ல, அரசியல் அறமும் அல்ல. மனச்சாட்சிக்கும் அறமல்ல. தன் நெஞ்சே தன்னைச் சுடாதா? என கே.பாலகிருஷ்ணன் பேச்சை கடுமையாக விமர்சித்திருந்தது.
இதனிடையே தான் தனக்கு 72 வயதாவதால் இனி கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கும் படி கே.பாலாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் எனக்கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அடுத்த மாநில செயலாளர் யார் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் யாரும் கே.பாலகிருஷ்ணன் பெயரை பரிந்துரைக்கவில்லை எனக்கூறப்படுகிறது. மற்றொருபுறம் கே.பாலகிருஷ்ணன் பேசி கருத்துக்கள் சர்ச்சையாக வெடித்துள்ளதால் திமுக தரப்பும் அழுத்தம் கொடுத்திருக்கக்கூடும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: கடப்பாறையால் உடைக்கப்பட்ட கதவு... இரவு முழுவதும் தொடர்ந்த ED ரெய்டு... அதிர்ச்சியில் வேலூர் திமுக!