ரூபாய் சின்ன மாற்றம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினை நிதியமைச்சர் சீதாராமன் கடுமையாக சாடியுள்ளார். இது 'ஆபத்தான மனநிலை' என எச்சரித்துள்ளார்.
நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதல் முறையாக பொருளாதார ஆய்வு அறிக்கை மற்றும் பட்ஜெட் லோகோவை வெளியிட்டார்.
தமிழக பட்ஜெட் ஆவணத்தில் வழக்கமான ₹ குறியீட்டை மாற்றி தமிழ் எழுத்தான ரூ-வை பட்ஜெட் சினிமா ஆக முதலமைச்சர் அறிவித்திருந்ததை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சேர்த்தாராமன் கடுமையாக கண்டித்துள்ளார், இது மொழியியல் மற்றும் பிராந்திய பேரினவாதத்தின் தவிர்க்க முடியாத எடுத்துக்காட்டு என்று கூறினார்.

இதையும் படிங்க: 'தமிழை காட்டுமிராண்டி என்றவர்தான் உங்கள் இயக்கத்தின் அடையாளமா..? நிர்மலா சீதாராமன் நெத்தியடி..!
இதுகுறித்து எக்ஸ் தள பதிவில், ரூபாய் சின்னத்தை மாற்றுவது "இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தும் மற்றும் பிராந்திய பெருமை என்ற போலித்தனத்தின் கீழ் பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவிக்கும் ஆபத்தான மனநிலையை" பிரதிபலிக்கிறது என்று சீதாராமன் கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ், ரூபாய் சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது திமுக ஏன் அதை எதிர்க்கவில்லை என்று சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது திமுக ஆளும் கூட்டணியில் இருந்தது.

முரண்பாடாக, ''முன்னாள் திமுக எம்எல்ஏ என் தர்மலிங்கத்தின் மகன் டி டி உதய குமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. "இப்போது அதை அழிப்பதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழ் இளைஞரின் படைப்பு பங்களிப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக தங்கள் நாணயப் பெயராக ரூபாயையோ அல்லது அதற்கு இணையானதையோ பயன்படுத்துகின்றன என்பதை அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"ரூபாய் சின்னம்'' சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் உலகளாவிய நிதி பரிவர்த்தனைகளில் இந்தியாவின் ஒரு அடையாளமாக செயல்படுகிறது. இந்தியா UPI ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் உண்மையில் நமது சொந்த தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?" என்று அவர் தமிழக அரசை விமர்சித்தார்.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..!