மானாமதுரை அருகே அரசு பள்ளிக்குச் செல்லும் வழியில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள இந்திரா நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளி பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக குழந்தைகள் நல வாரியம் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

அப்பொழுது யாரேனும் உங்களிடம் தவறுதலாக நடந்துள்ளார்களா? என்று கேட்கும் போது நான்கு மாணவிகள் எங்களிடம் பள்ளி சென்று வரும் பொழுது முதியவர்கள் , இளைஞர்கள் சிலர் எங்களைத் தவறுதலாக தொட்டார்கள், ஆபாச செய்கைகளில் ஈடுபட்டார்கள் , முத்தம் கொடுத்தார்கள் என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; பள்ளி மாணவர்கள் போக்சோவில் கைது!

சிறுமிகளிடம் தனித்தனியாக விசாரித்த போது அதே ஊரைச் சேர்ந்த ஏழு பேர் பல நாட்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மானாமதுரை காவல்துறையினர் சமந்தப்பட்ட சுமார் 7 நபர்களை கைது செய்து மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இதெல்லாம் வெட்கமா இல்லையா? - அரசு மருத்துவமனைக்கு நடந்த அவலத்தால் கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!