சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி. செங்கோட்டையன் ஆகியோர் மாறி மாறி டெல்லி சென்று வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் அமித்ஷா விடம் " எடப்பாடி பழனிச்சாமி " தலைமையில் தேர்தலை சந்தித்தால் தோல்வி தான் கிடைக்கும். எனவே தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி உருவாக்குவோம் என கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுகவினர் அண்ணாமலைக்கு பதிலடி தரும் வகையில் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, அதிமுக தலைமையில் தான் கூட்டணி, எடப்பாடி யாரை முதல்வராக ஏற்பவர்கள் தான் கூட்டணியில் சேர முடியும் என போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் அலறவிட்டு அனுப்பியிருக்காங்க... அண்ணாமலையை பங்கம் செய்த சேகர் பாபு...!
மற்ற பகுதிகளில் அதிமுகவினர் அமைதியாக உள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் பாஜக வை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் எதிர்த்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் மணிமாறன் என்பவர் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார். இன்று காலை முதல் மானாமதுரை, திருப்புவனம், சிவகங்கை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: தூக்கி வீசிட்டு போய்ட்டே இருப்பேன்... அமித் ஷாவுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை...!