கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா. நான்கு வருடங்களுக்கு முன்பு கணவனை பறிகொடுத்த நிலையில் தனது இரண்டு பெண்குழந்தைகளை வளர்பதற்க்காக பால் வியாபாரம் செய்துவந்தார் . வழக்கம்போல் நாகுகுப்பம் தெற்கு மேடு பகுதியில் இருக்கும் பால் சேகரிக்கும் நிலையத்தில் பாலை ஊற்றி விட்டு வீட்டிற்குத் திரும்பியவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் நிர்மலாவை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தம்பி மணிவண்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மறுநாள் காலை வடக்கு காட்டுக்கொட்டாய் சோளக்காட்டில் நிர்மலா பால் ஊற்றி வந்த பால் கேன்கள் மற்றும் காய்கறிகள் துப்பட்டா சிதறிக் கிடந்ததும் தெரியவந்தது.அதிலிருந்து சற்று தூரத்தில் தனது அக்கா நிர்மலா இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுது கத்திக் கூச்சலிட்டார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பெயரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர் .போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 6 நாட்கள் நடந்த தேடுதல் வேட்டையில் குமரேசன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.சின்னசேலம் நைனார்பாளையம் பகுதியில் டீக்கடையில் வேலை செய்து வந்த குமரேசன் சம்பவத்தின் போது காட்டுவழி பகுதியில் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது பால் ஊற்றுவதற்காக வந்த நிர்மலாவை அடித்து சோளக்காட்டு பகுதி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மயக்கமான நிலையில் இருந்த நிர்மலா தனக்கு நடந்த கொடூரத்தை வெளியே சொல்லி விடுவார் என்ற பயத்தில் கொலை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பு பற்றி பாஜக பேசலாமா ..? துரை வைகோ பளீர் ..!
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ..ரயில் தள்ளிக்கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை..நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு