பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபகாலமாக அதிகளவில் வெளிச்சம் பெற துவங்கி உள்ளன. பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகள் மத்தியில் உருவான விழிப்புணர்வே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இவ்வாறு பாலியல் குற்றங்களை நிகழ்த்துவோர் பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு பரீட்சையமானவர்களே என்றே சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், தங்களது இச்சையை தீர்த்துக் கொள்ள முதலில் தனக்கு நன்கு தெரிந்தவர்களையே பலிகடா ஆக்குகின்றனர்.

அத்தை, சித்தி, அக்கா, தங்கை என சகோதரி உறவு முறையிலான பெண், தனது நண்பர்களின் குழந்தை, உறவினர்களின் குழந்தை என்ற அளவிலேயே இவர்களது டார்கெட் அமைந்து விடுவதால், குழந்தைகளை யாருடனும் நெருங்கி பழகா வண்ணம் பார்த்துக் கொள்ள பெற்றோர் அதிக அக்கறை காட்டுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளுக்கு ஆசிரியர், டியூசன் டீச்சர், பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர், கார் டிரைவர் போன்றவர்கள் அதிகம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் பாலியல் தொல்லை அளிப்பதும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் உண்டு என்றாலும், அவற்றி எண்ணிக்கை சொற்பமே..
இதையும் படிங்க: பாலியல் "சார்களுக்கு" எதிராக சாட்டையை சுழற்றிய அன்பில் மகேஷ்... தமிழகம் முழுக்க பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்...!

இதுபோல நன்கு பழகியவர்கள் மூலம் தான் அதிக பாலியல் குற்றங்கள் நடப்பது ஆய்வில் ஊர்ஜிதம் ஆகியுள்ளது. இந்நிலையில் கடலூர் அருகே தனது மருமகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், பழைய நெய்வேலி பகுதியில் வசித்து வருபவர் சரவணன். வயது 55. கட்டிட தொழிலாளியான இவருக்கு 33 வயதில் ஒரு மகன் உள்ளார். அவரும் கட்டிட கூலி தொழிலாளி. சமீப காலமாக வெளியூரில் தங்கி கட்டுமான வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரவணின் மகனுக்கும், ஒரு பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு தற்போது 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவரின் மகன் வெளி ஊரில் கட்டுமான வேலைக்கு சென்று தங்கும் போது எல்லாம் மாமனார் சரவணன், மருகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருமகள், இதுகுறித்து கணவரிடமும், மாமியாரிடம் தெரிவித்துள்ளார். சரவணனின் லீலைகளை தெரிந்து கொண்ட அவரது மனைவி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அடிக்கடி குடித்து வந்துவிட்டு குடித்துவிட்டு தனது மாமியாரை கடுமையாக தாக்கி உள்ளார். மேலும் தொடர்ந்து தனது மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி விடும் என மருமகள் அச்சம் அடைந்துள்ளார். எனவே மாமியாருடன் சேர்ந்து மாமனார் சரவணனை தீர்த்துக்கட்ட மருமகள் முடிவு செய்துள்ளார். மாமியாரும், மருமகளின் ப்ளானிற்கு ஒப்புக்கொண்டுள்ளார். நேற்று சரவணன் மது போதையில் தூங்கி கொண்டிருந்த நேரம் பார்த்து இருவரும் சேர்ந்து அவர் ஆண் உறுப்பு மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தீ பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்ட சரவணின் குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 70% தீ காயங்களுடன் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமியார் மருமகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமனாரை மருமகள் மற்றும் மனைவி தீ வைத்து எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடன் கேட்ட பெண்ணை கட்டிப்பிடித்த தலைமை ஆசிரியர்… அடுத்து நடந்த டிவிஸ்ட்!!