புதிய வருமானவரி மசோதா 2025 குறித்து மக்களவையில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பேசியதாவது:
நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றைக் கண்டறிய அதிகாரிகளுக்கு டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பது முக்கியமானது. மொபைல் போன்களில் பாதுகாக்கப்பட்ட செய்திகளை ஆய்வு செய்தபோது அதன் உதவியுடன் ரூ.250 கோடி கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்க உதவியது. வாட்ஸ்அப் செய்திப்பரிமாற்றங்கள் மூலம் கிரிப்டோ சொத்துக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. வாட்ஸ்அப் செய்தி பரிமாற்றத்தின் மூலம் ரூ.200 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் கூகுள் மேப் வைத்து அடிக்கடி ஒருநபர் எந்தெந்த இடங்களுக்கு செல்கிறார், பணத்தை எங்கு மறைக்கிறார், இன்ஸ்டாகிராம் கணக்கு ஆகியவற்றை கண்டறியவும், பினாமி சொத்துக்கள் இருப்பதையும் ஆய்வு செய்ய முடிந்தது. புதிய தொழில்நுட்பத்துடன் அமலாக்கப்பிரிவு தங்களை மேம்படுத்தவும், கிரிப்டோகரன்சிகள் சொத்துக்கள் கவனிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த வருமானவரி மசோதா மூலம், வரிஆய்வு அதிகாரிகல் ஒருவரின் மின்அஞ்சல்கள், வாட்ஸ்அப் கணக்கு, டெலிகாரம் ஆகியவற்றை ஆய்வு செய்து பணப்பரிமாற்றங்களைக் கண்டறிய முடிகிறது. பிஸ்னஸ் மென்பொருட்கள், சர்வர்கள் மூலம் மறைக்கப்பட்ட நிதி பரிமாற்றங்களையும் எடுக்க முடிகிறது.
இதையும் படிங்க: வெடிக்கும் "ரூ" குறியீடு விவகாரம்... தமிழக அரசை விளாசிய நிர்மலா சீதாராமன்...!

ஒருவர் வரிஏய்ப்பு செய்ததை நீதிமன்றத்தில் நிரூபிக்க டிஜிட்டல் கணக்குகளும், ஆதாரங்களும் அவசியம், அப்போதுதான் வரிஏய்ப்பு துல்லியமாக எவ்வளவு நடந்தது என்பதைக் கண்டறிய முடியும்” எனத் தெரிவித்தார். புதிய வருமானவரி மசோதா 2025 கடந்த பிப்ரவரி 13ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் மூலம் 1961ல் இருந்த பழைய வருமானவரி சட்டம் முடிவுக்கு வரும். பழைய சட்டங்களில் பெரும்பாலான சரத்துக்கள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன, இந்த புதிய மசோதாவின் நோக்கம் மொழியை எளிமைப்படுத்தி, தேவையற்ற பிரிவுகளை நீக்குவதுதான்.

அரசுக்கு தெரிவிக்காத வருவாய், விர்சுவல் டிஜிட்டல் சொத்துகள், டிஜிட்டல் டோக்கன், கிரிப்டோகரன்சி, ஆகியவற்றை கண்டுபிடிக்க இந்த மசோதாவில் சிறப்பு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒருவர் வரி ஏய்ப்பு செய்துள்ளார் எனக் கண்டறிந்து அவரைசோதனை செய்யும்போது, அவரின் தனிப்பட்ட மின்அஞ்சல்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், ஆகியவற்றை அதிகாரிகள் எடுக்க முடியும், பார்க்க முடியும் அளவுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மின்அஞ்சல்கள் சர்வர்கள், சமூக ஊடக கணக்குகள், ஆன்லைன் முதலீடு, டிரேடிங், இணையத்களில் சொத்துக்கள் முடக்கம் ஆகியவற்றை வெளியே எடுக்க முடியும்.
இதையும் படிங்க: நிஜமாவே உங்களுக்கு வருத்தமா?... நிர்மலா சீதாராமனை வறுத்தெடுத்த விஜய்...!