விழுப்புரம் மாவட்டம் சேர்விளாகம் ஊராட்சியை சேர்ந்த விக்ரம் என்பவர், அங்கன்வாடி பணியாளராக பணியாற்றிய தன் தாய் தங்கம் மரணமடைந்ததையடுத்து கருணை அடிப்படையில் அந்த பணியை வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்திருந்தார்.
5 ஆண்டுகளுக்கு பின் இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த அரசு, தமிழக அரசின் அரசாணை படி பெண் வாரிசுகளுக்கு மட்டுமே சத்துணவு பணியாளர்களுக்கான பணி வழங்க முடியும் எனக்கூறி கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்ரம் வழக்கு தாக்கல் செய்தார்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆண் வாரிசுகளுக்கு சத்துணவு பணியாளர் பணி வழங்க தடை விதித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருப்பதால் மனுதாரரின் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலித்து 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: கல்விக்கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி என்னவானது..? அமல்படுத்தக்கோரி பொதுநல மனு தாக்கல்..!

மீண்டும் அதே காரணத்தை கூறி நிராகரித்துள்ளதாக குற்றம்சாட்டி சமுக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி விக்ரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனந்த் வெங்கடேஷ், அரசு அதிகாரியின் நடத்தை என்பது நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாததை காட்டுக்கிறது என்பதால் வரும் ஏப்ரல் 1ம் தேதி சமூக நலத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும், மீண்டும் பதவி உயர்வா..? இடைக்கால தடைவிதித்த நீதிமன்றம்..!