செலவுக்கு பணம் தராததால் தந்தையை அடித்து கொலை செய்து விட்டு அதை வீடியோ எடுத்த கொடூரம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. மனிதன் தன் காட்டுப்பாட்டை இழக்கும் போது அவன் மிருகமாக மாறுகிறான் என்பதை சில சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. அந்த வகையில் தான் ராஜஸ்தானில் நடந்த ஒரு சம்பவமும் கேட்போரை கதிகலங்க வைக்கிறது.
ராஜஸ்தனை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு ரோஹித் என்ற மகன் உள்ளார். தந்தை, மகன் இருவரும் இனிப்புகளை தயாரிக்கு பேக்கரி வைத்து நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ரோஹித் தன்னுடைய 17,000 பணத்தை தன் தந்தை ஜெகதீஷிம் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை பிறகு வாங்கி கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் பணத்தேவை இருந்ததால் ரோஹித் கொடுத்த பணத்தை ஜெகதீஷிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரப்பட்ட தந்தை, நீ பொறுப்பில்லாமல் இருக்கிறாய். எந்த வேலையும் செய்வதில்லை என்று ரோஹித்தை குற்றம்சாட்டும் விதமாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோஹித் மனம் வருந்தியுள்ளார். வாங்கிய பணத்தை தராமல் தந்தை ஏமாற்றுவதாக நினைத்துள்ளார்.
இதையும் படிங்க: சொல்பேச்சை கேட்காத மனைவி... துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன்!!

இந்த எண்ணம் ரோஹித்தை ஒரு மிருகமாக மாற்றியுள்ளது. ஜெகதீஷ் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது அங்கு வந்த ரோஹித் இரும்பு ராடை எடுத்து ஜெகதீஷ் தலையில் பலமாக அடித்துள்ளார். அதில் படுகாயமடைந்த ஜெகதீஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். தன்னை காப்பாற்றும்படி ஜெகதீஷ் கதறிக் கொண்டிருக்க அதை ரசித்தப்படி செல்போனில் வீடியோ எடுத்த ரோஹித், தனது மாமாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த வீடியோவை பார்த்து அலறிய உறவினர்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெகதீஷை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், ஜெகதீஷ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜெகதீஷின் உறவினர்கள் அந்த வீடியோ ஆதாரத்துடன் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் அவர் ரயில் நிலயத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் கையும், களவுமாக ரோஹித்தை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் மனைவி தப்பி ஓட்டம்...தடுத்த கணவனுக்கு அடி, உதை!!