காங்கிரஸ் கட்சியின் அனுதாபியான இளம்பெண் ஹிமானி வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு, உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு பேருந்து நிலையம் அருகே வீசப்பட்ட வழக்கில் அவரது நண்பரே கைது செய்யப்பட்ட பரபாரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம். ரோஹ்தக்கில் காங்கிரஸ் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் 36 மணி நேரத்திற்குப் பிறகு மர்ம முடிச்சு அவிழ்ந்துள்ளது. கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வ் வருகிறது.குற்றம் சாட்டப்பட்டவர் இறந்த ஹிமானி நர்வாலின் நண்பர். அவர் ஹிமானியை அவரது சொந்த வீட்டிலேயே கொலை செய்தார். கொலைக்குப் பிறகு, குற்றவாளிகள் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து அடைத்து, சம்ப்லா பேருந்து நிலையத்தில் வீசிவிட்டு டெல்லிக்கு தப்பிச் சென்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் சச்சின் என்று கூறப்படுகிறது. அவரும் ரோஹ்தக்கில் வசிப்பவர். நண்பராக இருந்தும் அவர் ஏன் ஹிமானியைக் கொன்றார்? என குற்றம் சாட்டப்பட்ட சச்சினிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஹரியானா காவல்துறை டெல்லியில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து ஹிமானியின் மொபைல் போன், நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இன்று இந்த கொலையின் நோக்கம் குறித்து சற்று நேரத்தில் தகவல்களை வெளியிடலாம்.
இதையும் படிங்க: 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்.. கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட மனைவி..3 பேர் கைது..

ஹிமானி கொலை வழக்கில் முதல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சச்சின் ரோஹ்தக்கில் வசிப்பவர். விஜயநகரில் உள்ள அவரது வீட்டில் ஹிமானியை, சச்சின் கொலை செய்துள்ளார். பின்னர் ஹிமானியின் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து அடைத்து, வீட்டிலிருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே வீசினார். உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காங்கிரஸ் விசுவாசியான ஹிமானி நர்வாலின் உடல் மார்ச் 1 ஆம் தேதி ரோஹ்தக்கில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள சம்ப்லா பேருந்து நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, சடலத்தின் முகம் நீல நிறமாக மாறியிருந்தது. அவள் கைகளில் மருதாணி இருந்தது.

போலீசார் உடலை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் அப்பகுதியில் உள்ள பல சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் சச்சின் என்று போலீசார் அடையாளம் காட்டினர். டெல்லியில் வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
ஹிமானி நர்வாலின் கொலை ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரசின் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் காணப்பட்ட பிறகு ஹிமானி செய்திகளில் இடம்பிடித்து பிரபலமானார். ஹிமானியின் தந்தை முன்னதாகவே தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம், அவரது சகோதரர் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

ஹிமானி தனது தாய் மற்றும் ஒரு சகோதரருடன் ரோஹ்தக்கின் விஜய்நகர் பகுதியில் வசித்து வந்தார். ஹிமானியில் குடும்ப உறவுகள் கூறுகையில், ஹிமானி இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளவிருந்தார். அவள் ஒரு மணமகனைத் தேடிக்கொண்டிருந்தாள். 2024 ஆம் ஆண்டு தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருந்ததால், 2025 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள ஹிமானி முடிவெடுத்து இருந்ததாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான நாகேந்திரன் உடல்நிலை.. ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!