காஷ்மீரில் சுற்றலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக அளவில் கடும் கண்டனங்களை குவித்து வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தாக்குதலுக்கு இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தது. அதே பாணியை மீண்டும் ராணுவம் கையில் எடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த நாடே பாகிஸ்தானுக்கு எந்த மாதிரியான பதிலடியை கொடுக்கப்போகிறது என காத்துக்கொண்டிருக்கிறது. இதனிடையே, இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு அஞ்சி பாகிஸ்தான் கராச்சியில் ஏவுகணைச் சோதனையைத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா அதிதீவிரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும், பாகிஸ்தானை எந்தெந்த வகைகளில் தாக்கலாம் என திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

முதல் கட்டமாக எல்ஓசி தாக்குதலை இந்தியா நடத்தும் என்று கூறியுள்ளனர் அதாவது 1947க்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு இதுதான் எல்லை என்பது குறிக்கப்பட்டிருந்தது இந்த எல்லையை தான் எல்ஓசி அதாவது லைன் ஆஃப் கண்ட்ரோல் என்றுகூறுகிறார்கள். அதாவது எல்லையைக் கடந்து சென்று எதிரி தரப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவை எல்ஓசி தாக்குதல் என்று சொல்லப்படுகிறது. இதை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று சொல்வார்கள்.

இதையும் படிங்க: பாகிஸ்தானை விட்ராதீங்க.. இஸ்ரேல் போல இந்தியா இறங்கி அடிக்கணும்.. அமெரிக்க மாஜி அதிகாரி ஆவேசம்..!
கடந்த 2016 ஆம் ஆண்டு உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் இதனை நடத்தியது. அதேபோல 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இந்திய விமானப்படை சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை நடத்தியது. இது தவிர ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்தவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தியாவிடம் உலகின் மிக வேகமான ஏவுகனைகள் இருக்கின்றன. குறிப்பாக ஒளியை விட மூன்று மடங்கு வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகனைகள் இருக்கின்றது.
இதனை நிலம், கடல், வான்வழி என மூன்று வழிகளில் ஏவலாம். அதேபோல நிர்பாய், பிரித்வி, அக்னி உள்ளிட்ட ஏவுகணைகளும் இருக்கின்றன. இவற்றை கொண்டு எல்லையில் உள்ள தீவிரவாத முகாமகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. மூன்றாவதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் விமானப்படை நடத்தியதை போன்று வான்வழி தாக்குதலையும் இந்தியா நடத்த வாய்ப்பு இருக்கிறது எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: ‘ராபர்ட் வத்ரா தீவிரவாதத்தை நியாயப்படுத்தி, ஆதரவாகப் பேசுகிறார்’: பாஜக பாய்ச்சல்..!