இபிஎஸ் நேற்று நடத்திய விருந்து நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எடப்பாடியாரை வணங்கி உரையை ஆரம்பிக்கிறேன் என்று செங்கோட்டையின் கூறியிருப்பதன் பின்னணி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது செங்கோட்டையின் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனிடையே டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை தனியாக சந்தித்து பேசியது, நிர்மலா சீதாராமனை சந்தித்தது கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தில் அதிமுகவினர் எல்லோரும் வெளிநடப்பு செய்தபோது செங்கோட்டையின் மட்டும் உள்ளே அமர்ந்திருந்தது என இவரது செயல்பாடுகளால் அதிமுக நிர்வாகிகளிடையே புகைச்சலை ஏற்படுத்தியது.

எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவதற்கு மூத்த நிர்வாகியான இவர்தானே முக்கிய பங்காற்றினார. இப்போது ஏன் இப்படி முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக உடன் பிறப்புகள் புலம்பி வந்தனர். இச்சூழலில் தான் நேற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரவு விருந்து வழங்கினார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்ட சூழலில் செங்கோட்டையன் மட்டும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி கொடுத்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்... மீண்டும் அதிமுகவில் பரபரப்பு!!
அண்மையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டபோதே அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய அமித் ஷா எல்லோரும் ஒன்றாக இருந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதிமுகவினர் பல பிரிவுகளாக பிரிந்து இருந்தால் அது நமது கூட்டணிக்கு தான் ஆபத்து. எனவே எல்லோரும் ஒன்றாக இருங்கள், ஒன்றாக இருந்தால் தான் திமுகாவை வீழ்த்த முடியும் என்று அட்வைஸ் வழங்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் நேற்று இபிஎஸ் நடத்திய விருந்து நிகழ்வில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது அதிமுகா மற்றும் பாஜகவினடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் செங்கோட்டையைத் தொடர்பு கொண்டு, அமித் ஷா ஏற்கனவே எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். தேர்தல் நெருங்கும் சூழலில் நீங்கள் இப்படி நடந்து கொண்டால் மக்களுக்கு எப்படி நம் கூட்டணி மீது நம்பிக்கை வரும். உங்கள் மனதில் இபிஎஸ் மீது எந்த விமர்சனங்கள் இருந்தாலும் அதை கொஞ்ச நாட்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு இபிஎஸ் உடன் இணைந்து செயல்படுங்கள் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதேபோல் இபிஎஸ் தரப்பும் செங்கோட்டையனை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்சூழலில் தான் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ‘எடப்பாடியாரை வணங்கி’ என்று தனது பேச்சை செங்கோட்டையன் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் இனி எனக்கு எதிராய் யாரும் இருக்கக்கூடாது. அதிமுகா என்றால் இபிஎஸ், இபிஎஸ் என்றால் ஆதிமுகா என்பதை எடப்பாடி உறுதி செய்திருக்கிறார் என்று சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் நடக்கப் போவது என்ன..? செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்பாரா சபாநாயகர் அப்பாவு..?