பெரியவர் சிறியவர் என்கிற ஈகோ இல்லாத ஒரே கட்சி அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திமுக குடும்ப ஆதிக்கம் செலுத்தும் கட்சி என்றும், அதிமுகவில் கொடி பிடிக்கும் தொண்டர்கள் கூட பதவிக்கு வருவார்கள் என்றும் தெரிவித்தார். மதுபான முறைகேட்டில் ஆட்சி இழந்த டெல்லி மற்றும் சத்தீஸ்கர் மாநிலம் போல திமுகவும் 2026 ஆண்டில் தேர்தலில் ஆட்சியை இழக்கும் என கூறினார்.
இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெயக்குமார்... அதிமுக பாசம் அவ்வளவு லேசுல விடுமா?

அதிமுக உடைக்க முடியாத மாபெரும் இயக்கம் என்றும் குறிப்பிட்டார் பொதுவாவே பார்த்தீங்கன்னா எங்க கட்சியில் ஈகோன்றதே கிடையாது. “நீங்க பெரியவர் நான் பெரியவர் நீ சிறியவர் நான் பெரியவர்” என்ற அந்த இதே கிடையாது.

சென்டிமெண்ட்டா பார்த்தீங்கன்னா மூணாவது கவர்மெண்ட் 2026ல வர முடியாம போறதுக்கு டாஸ்மார்க் வந்து ஒரு பெரிய அளவுக்கு இன்னைக்கு வந்து அவருக்கு தலைவலி பிடிச்சிருக்கு. இந்த தலைவலி வந்து திமுகு வழியாகி கடைசில வந்து தீராத வழியா ஒட்டுமொத்தமா வந்து வீட்டுக்கு போற ஒரு நிலைமைதான் இன்னைக்கு திமுகக்கு ஏற்படும் டெல்லிக்கு சதீஷ் காருக்கு ஏற்பட்ட நிலைமை 2026ல தமிழ்நாட்டுக்கு ஏற்படும் என்றார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு ஒரே அவசரம்... அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு சீறிய ஜெயக்குமார்...!