சென்னை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அவரது அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி சந்தித்துப் பேசியுள்ளது திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நாளை பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், தனது பேரனுடன் சென்று வாழ்த்து கூறினார் மு.க.அழகிரி.
இதையும் படிங்க: திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு கத்திக்குத்து.. சொத்து பிரச்சனையால் வெறிச்செயல்.. 17 வயது சிறுவன் கைது..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ளார். இந்நிலையில், மு.க.அழகிரி தம்பி ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மிகுந்த மனமகிழ்ச்சியோடு அதனைப் பெற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். மு.க அழகிரி , ஸ்டாலினை பார்க்கச் சென்ற போது, உடன் அழகிரியின் மூத்த மகள் கயல்விழியின் மகனுடன், உதயநிதியின் மகன் இன்பநிதியுடன் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மு.க அழகிரி, அவரது மூத்த மகள் கயல்விழியின் மகன் இன்பநிதி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்க்கும் திமுக தொண்டர்கள், ''கண்கள் பனித்தன. இதயம் இனித்தது'' என உற்சாகமாகி வருகின்றனர்.
கடந்த சில ஆண்ய்களாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் , அவரது சகோதரர் ஸ்டாலினுக்கும் இடையே முரண்பாடு காரணமாக , பேசுவார்த்தை இல்லாமல் இருந்து வந்தது. கருணாநிதி உயுடன் இருகும்போதே திமுக கட்சியை விட்டும் , குடும்பத்தை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்டார் அழகிரி.
இந்நிலையில்,பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் மு.க.அழகிரியும் ,தம்பி மு.க.ஸ்டாலின் வீட்டிற்கே சென்று, சந்தித்து இருப்பது, அவர்களுக்கு இடையேயான , க்க்சப்பை நீக்கி உள்ளதாகவே திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக அரசியலில் திமுகவின் தென் மண்டலத் தலைமயாக கோலோச்சி வந்த முக.அழகிரி திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். அரசியல் மனக்கசப்பால் ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் பெரும் பகைமூண்டது. இதனால், கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே அழகிரி ஒதுக்கி வைக்கப்பட்டார்.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு கட்சியில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என தர்மயுத்தத்தை ஆரம்பித்தார் மு.க.அழகிரி, ஆனால், இணைத்துக் கொள்வதில் உடன்பாடின்றி விடாப்படியாக ஸ்டாலின் இருந்து வந்ததால், மு.க.அழகிரி திமுகவை உடைத்து விடுவார் என்றும் அப்போது சொல்லப்பட்டது. அதிருப்தி காரணமாக அவர் பாஜகவில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அழகிரியின் ஆதரவாளர்கள் ஸ்டாலினுக்கு எதிராக மதுரையில் கடும் எதிர்ப்பு அரசியல் செய்து வந்தனர்.

எதுவும் நடக்காததால் எனக்கு வேண்டாம் தனது மகன் தயாவுக்காவது பதவி கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தார் அழகிரி. ஆனால் மு.க.ஸ்டாலி செவி சாய்ப்பதாக இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தயாவுக்கு மதுரை தொகுதியை அழகிரி கேட்டு வந்ததாகவும், அதற்கும் ஸ்டாலின் இசையவில்லை என்றும் கூறப்படுகிறது. அடுத்து தயா உடல்நலம் பாதிக்கப்பட்டபோது வேலூர் சி,எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரை பார்த்து நலம் விசாரித்து வந்தார். அடுத்து மதுரை சென்ற உதயநிதி தனது பெரியப்பா அழகிரியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து வந்தார்.

அதன்பிறகு மெல்ல மெல்ல இதயங்கள் இனிக்க ஆரம்பித்தன. இந்நிலையில் மு.க.அழகிரி தனது தம்பி மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். அழகிரி, மீண்டும் திமுக கட்சிக்குள் வந்து , அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தென் மாவட்டங்களில் திமுகவை வலுப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், திமுகவின் அரசியல் பிரவேசத்தை மு.க.அழகிரி எடுக்க உள்ளதாகவும், தென் மாவட்டங்களில் திமுக கட்சியின் மேலும் வலுப்படுத்த மு.க.அழகிரி களமிறங்குவார் என கூறப்படுவதால்; உடன்பிறப்புகள் உற்சாகமடைந்து உள்ளனர்.