ஈரோடு பிரச்சார களத்தில் இருந்து சீமானை வெளியேற்ற வேண்டும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், பீகார் வளராமல் போனதற்கு மதவெறியே காரணம்.
தமிழ்நாட்டில் மதவெறி கலவரத்தை ஏற்படுத்த முடியாததற்கு காரணம் தந்தை பெரியாரும் திராவிடமும் தான். இந்த அரசியலில் பெரியாரை அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். பெரியார் இந்த மண்ணை பக்குவப்படுத்தி இருக்கிறார்.

பல்வேறு குறைபாடுகளை இங்கு எதிர்கொண்டிருக்க கூடிய சூழலில் மதவெறிக்கு எதிரான மனநிலையை சிதைக்கின்ற, மதவெறிக்குள் தமிழர்களை தள்ளக்கூடிய செயலை செய்து வருகின்றனர். இதற்காக தந்தை பெரியாரை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்கின்ற செயலை பாஜக செய்து வருகிறது.
இதையும் படிங்க: சீமானை விடாமல் விரட்டும் பெரியார் மண்... சாட்டை துரைமுருகன், சீதாலட்சுமி உட்பட 7 பேருக்கு ஆப்பு!
பாஜகவோடு கைகோர்த்துக் கொண்டு சீமான் தற்பொழுது அந்த வேலையை செய்து வருகிறார். சீமான் பிஜேபியுடன் மிக நெருக்கமாக இருப்பதை, அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் வெளிப்படுத்தியிருக்கிறார். சீமானின் மதவெறி முகம் இன்று வெளியாகி இருக்கிறது. வெடிகுண்டு வைத்திருக்கிறேன், வீசினால் புல் பூண்டு கூட முளைக்காது என சீமான் பேசி வருகிறார். இதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது.? அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
வன்முறை கலாச்சாரத்தை உருவாக்க சீமான் முயற்சித்து வருகிறார். சீமான் உடனடியாக தொகுதியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும்.அந்த கட்சியும் தேர்தல் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோம். தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களை மிரட்டுவதும் தேர்தலை சீர்குலைக்கும் செயலில் சீமான் இறங்கி இருக்கிறார்.

இது கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல தண்டிக்கப்பட வேண்டியதும் கூட நாளை அல்லது நாளை மறுதினத்திற்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து நாதக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யாவிட்டால் தொகுதியில் போராட்டம் நடத்துவோம்.
சீமான் பாஜகவிற்கு ஆதரவாக தொடர்ச்சியாக பெரியாரை இழிவு படுத்தி வருகிறார் இது குறித்து நேரடி விவாதத்திற்கு வராவிட்டால் சீமான் அலுவலகத்திற்கு நேரடியாக வருவதாக சொல்லி இருக்கின்றோம். சீமானிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எங்கள் மேடைக்கு வாருங்கள் வரத் பயமாக இருந்தால் நாங்கள் உங்கள் கட்சி அலுவலகத்திற்கு வருகிறோம் அல்லது கட்சி அமைக்கும் மேடைக்கும் வர தயாராக இருக்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: முழு சங்கி மாதிரி பேசுறீங்களே சீமான்... கும்பிடு போட்டு கட்சியிலிருந்து ஜூட் விட்ட நாதக முக்கிய மாநில நிர்வாகி.!