''ஒர்க் ஃப்ரம் ஹோம் பாலிடிக்ஸ் செய்கிறார் விஜய்.. 50 வயசுலதான் பாலிட்டிக்ஸ்க்கு வரணும்னு விஜய்க்கு ஞானம் வந்துசுச்சா?'' என விரல்களை நீட்டி விஜய்யை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தி, ரூ.1000 கோடி முறைகேடு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், இங்குள்ளவர்களை பாஜக அரசு காப்பாற்றுகிறது. இருக்கும் ரகசிய தொடர்பு உள்ளதாக நேற்று தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, ''தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை வரச் சொல்லுங்கள். ஸ்கூல் பசங்க மாதிரி உட்கார்ந்து பாலிடிக்ஸ் செய்கிறார்கள். சினிமா சூட்டிங் போல அரசியல் செய்வார் விஜய்.தவெக சினிமா ஷூட்டிங்கில் உட்கார்ந்து பாட்டு பாடிக்கொண்டு, நடிகையினுடைய இடுப்பைக் கிள்ளிக் கொண்டு அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் விஜய்.
இதையும் படிங்க: தவெக-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா சஸ்பெண்ட்..? விளக்கமளித்த கட்சித் தலைமை..!

ஒரு அறிக்கை விடுக்கும்போது அந்த அறிக்கைக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். நானும் தவெகவை மரியாதையுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் என்ன விஜய் மாதிரி உட்கார்ந்து நடிகையின் இடுப்பையா கிள்ளிக் கொண்டிருக்கிறேன். நான் களத்தில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறேன். களத்தில் இருந்து பேசுகிறேன். நாடகம் யார் நடத்துகிறார்கள்? விஜய்க்கு 50 வயதில்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தோன்றியதா? 30 வயது இருக்கும் போது எங்கே போனார்?
50 வயதில் புத்தர் எழுப்பி விட்டு நடிகர் விஜயை அரசியல் வரச் சொன்னாரா? விஜய் யாருடைய 'பீ' டீம். நாடகம் செய்கிறார்களாம். பாஜக செய்கிறதா? விஜய் செய்கிறாரா? நாடகம் போடுவது விஜய். நாடகம் போடுவது தவெக.திமுகவின் 'பி' டீம்தான் விஜய். இன்றைக்கு நான் ஆணித்தரமாக உறுதியாக சொல்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தினுடைய நடவடிக்கைகளை பார்த்த பிறகு நான் சொல்கிறேன். திமுக மறுபடி ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆரம்பித்த ரகசிய திட்டம்தான் தவெக. சகோதரர் விஜய் அவர்கள் வரம்பு மீறி பேசும்போது எனக்கும் பேசத் தெரியும்.

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக் கொள்ள வேண்டும். சும்மா இந்த புஸ்ஸி ஆனந்த், புஸ்ஸி ஆனந்த் என்று உட்கார்ந்து கொண்டு அறிக்கை எல்லாம் கொடுக்கக் கூடாது. நீ எல்லாம் உட்கார்ந்து பாலிடிக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறாய். களத்துக்கு வா... உட்கார்ந்த இடத்தில் இருந்து அறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கிறாய். உனக்கு என்ன தெரியும் மக்கள் கஷ்டத்தை பற்றி..? சினிமாவில் சிகரெட் பிடிப்பாய்... சரக்கு அடிப்பாய்.. இதெல்லாம் செய்துவிட்டு டாஸ்மார்க் பற்றி பேசுவதற்கு விஜய்க்கு யார் உரிமை கொடுத்தார்கள்?

மாஸ்டர் படத்தில் விஜயின் கதாபாத்திரம் என்ன? சும்மா ஒரு குல்லாவை போட்டுக்கிட்டு நான் மைனாரிட்டி சமூகத்தின் பாதுகாவலன் என இப்தார் வைத்தால் எல்லாம் வந்து விடுமா? புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு புறம் அரசியல் செய்து கொண்டு... சின்ன பசங்கள் போல பாரதிய ஜனதா கட்சியிடம் வந்து சண்டை போடக்கூடாது.
மிகவும் சிறப்பாக பாரதிய ஜனதா கட்சி போராட்டம் செய்ய காரணம் அடைத்து வைப்பதற்கு மண்டபம் இல்லை. இவர்களே மன்னிப்பு கேட்டு பாதிப்பேரை ரோட்டில் இறக்கி விட்டு சென்று விட்டார்கள். சென்னையில் இருந்த 10 மண்டபங்கள் பூர்த்தியாகிவிட்டது. இப்போது நாங்கள் தேதி சொல்லாமல் போராட்டம் செய்தால் காவல்துறையின் நிலைமை என்னவாகும் யோசித்து பாருங்கள்?'' என ஆவேசத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் பின்னால் திரளும் இளம் சிறுத்தைகள்..? ஓரிரு சீட்டுக்காக 'உதறித் தள்ளும்' திருமாவளவன்..?