சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மாணவிகளுக்குக்கான பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட தன்னார்வலர்கள் பள்ளி சிறுமிகளிடத்தில் குட் டச், பேட் டச் குறித்து விளக்கி கூறியுள்ளனர். சில உடல் பாகங்களை யாரும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது. அவ்வாறு தொட்டு பேசுவபர்கள் பற்றி தயங்காது பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பொது இடம், உறவினர்கள், நண்பர்கள் என எங்கு உங்களுக்கு பேட் டச் நடந்தாலும் அதை சகித்துக் கொள்ளகூடாது. எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக இதற்கு முன்னால் இதுபோன்ற பேட் டச் நிகழ்ச்சிகளை சந்தித்து இருந்தால் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

அப்போது 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி எழுந்து, இது போன்ற அருவருக்கத்தக்க செயல் தனக்கு நடந்திருப்பதாக கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே அந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள், சிறுமி சந்தித்த பிரச்சனைகள் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த சிறுமி, சேலம் மாவட்டம் ஆத்தூர் தீப்பெட்டி கம்பெனி பகுதியில் கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் கூலிப்பெண்ணின் மகள் என தெரிந்தது. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்ததும் தெரிந்தது. விடுமுறைக்காக தாத்தா வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த தனது தாய்மாமனே சிறுமியிடம் அத்துமீறியதையும் சிறுமி அழுதபடி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கண்ணை மறைத்த கள்ளக்காதல்! மனைவியை கண்மூடித்தனமாக வெட்டிசாய்த்த கணவன்..!

உடனே விழுப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிறுமியின் தாயை, அழைத்து பேசியுள்ளனர். இதுபோல் சிறுமி, விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு சென்றாளா? உங்களது சகோதரர் நடவடிக்கை என்ன? என்பது குறித்து விசாரித்தனர். சிறுமி அழுதபடியே விவரித்த அனைத்தும் எடுத்து கூறியுள்ளனர். இதனால் கலக்கமடைந்த சிறுமியின் தாயார், விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வழிகாட்டுதலின் படி ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், மாணவியிடம் விசாரித்த போது தனது அம்மாவின் அண்ணன் மோகன்குமார் தன்னிடம் பேட் டச் செய்ததாக விவரித்துள்ளார்..

4 வருடங்களுக்கு முன்பு தாத்தா வீட்டிற்கு சென்றபோது பேட் டச் செய்ததாகவும், அதே போல் இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு செய்தததாகவும் சொன்னார். அதோடு கடந்த 10ம் தேதி மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அழுதபடி தெரிவித்துள்ளார். இதன்பேரில் பைத்தூர் அய்யனார் கோவில் அருகில் சலூன் கடையில் வேலை செய்து வரும் 46 வயதான தாய் மாமன் மோகன்குமார் என்பவரை மகளிர் போலீசார் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குட் டச், பேட் டச், விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் தாய் மாமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கழுத்தை நெரித்தக் கடன்; மனைவி, மகளுடன் வெள்ளி வியாபாரி தூக்கு போட்டுத் தற்கொலை!