யார் கோபமாக இருந்தாலும், கறைபடிந்த சிறப்பு பணி அதிகாரிகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி முதல்வர் ஃபட்னாவிஸ் எடுத்துள்ள 'மோடி அவதாரத்தால்' மகாராஷ்டிரா அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் அமோக வெற்றி பெற்று முதல்வர் பதவிக்கு திரும்பிய தேவேந்திர ஃபட்னாவிஸுக்கும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே நடந்து வரும் பனிப்போர் உச்சமடைந்து வரும் நிலையில், மறுபுறம், ஃபட்னாவிஸின் பிரதமர் மோடியின் அவதாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசின் பணிகளை ஃபட்னாவிஸ் கண்காணிக்க முடியும் என்றாலும், அமைச்சர்களின் சிறப்பு பணி அதிகாரிகள், தனிப்பட்ட செயலாளர்களை நியமிப்பது குறித்து தான் மட்டுமே முடிவெடுப்பேன். யார் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று அவர் தெளிவுபடுத்தி உள்ளார். அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, ஃபட்னாவிஸின் இந்த கடுமையான நடைமுறையை வெளிப்படுத்தி உள்ளார். ''தவறாக நடந்து கொண்டால் வீட்டிற்குச் சென்றுவிடுவீர்கள் என ஃபட்னாவிஸ் முதல் நாளிலேயே எச்சரித்தார். அத்தோடு யார் வெளியேறினாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் ஃபட்னாவிஸ் எச்சரித்ததாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: பிரதமரே வயநாட்டுக்கு நிதி கொடுங்க... பிரியங்காவின் முதல் கடிதம்..!
அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், சிறப்புப் பணியில் உள்ள அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கே உள்ளது. இது குறித்து முதலமைச்சர் இறுதி முடிவை எடுப்பார். இது ஒன்றும் புதிதல்ல. ''தவறுகளில் ஈடுபட்டவர்களின் பெயர்களை நான் அங்கீகரிக்க மாட்டேன்'' அழுத்தமாக கூறி வருகிறார்.

கோகட்டேவின் இந்த புலம்பல்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ், ''ஏஜெண்டுகள் சிறப்புணி அதிகாரிகளாகவும், அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்களாகவும் மாறுவதை அனுமதிக்க மாட்டேன். மகாயுதி அரசின் பல்வேறு அமைச்சர்களிடம் இருந்து தனிப்பட்ட ஊழியர்களில் நியமனம் செய்ய 125 பெயர்களை அனுப்பி உள்ளனர்'' எனத் தெரிவித்தார். ஆனால் அவர்களில் 16 பெயர்களை நிராகரித்து 109 பெயர்களை அங்கீகரித்தார். ஃபட்னாவிஸின் இந்த மோடி அவதாரத்தால் மகாராஷ்டிராவில் குழப்பம் நிலவுகிறது.
ஒருபுறம், உள்துறையின் அதிருப்தியால் ஷிண்டே இன்னும் கோபமாக இருக்கிறார். மறுபுறம், அஜித் பவாரும் மிகவும் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மகாயுதி அரசிற்குள் நடைபெற்று வரும் விவகாரங்கள் அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவின் புலம்பலுக்குப் பிறகு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய மாணிக்ராவ் கோகடே, 'மஹாயுதி அரசில் எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட செயலாளர், சிறப்பு பணி அதிகாரிகள் கூட முதலமைச்சரால் தீர்மானிக்கப்படுகிறது'' எனத் தெரிவித்து இருந்தார். மாணிக்ராவின் இந்த அதிருப்தி சர்ச்சையான பிறகு, ஃபட்னாவிஸ் இந்த பிரச்சினையில் செயல்பாடுகள், சுத்தமான வேலைக்கு முன்னுரிமை அளிப்பதாக தெளிவுபடுத்தியுள்ளார். ஃபட்னாவிஸ் முதலமைச்சராகப் பதவியேற்றபோது, அரசின் பாதி பதவிக்காலத்திற்குப் பிறகு அமைச்சர்களின் பணிகள் தணிக்கை செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, இதேபோன்ற ஒரு முறையை அவர் செயல்படுத்தினார். அதை அவர் இப்போதும் பராமரித்து வருகிறார். பிரதமர் அலுவலகத்திற்கு அடிக்கடி வருபவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள். குஜராத் முதல்வர் அலுவலகத்தில், முதல்வரைச் சந்திப்பவர்களின் சுயவிவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. மகாராஷ்டிராவின் முதல்வர் அலுவலகத்தில் இதேபோன்ற ஒரு முறையை முதல்வர் ஃபட்னாவிஸ் செயல்படுத்தினார்.
அனுவலகத்திற்கு வருபவர்களைக் கண்காணிக்கும் முறையை ஃபட்னாவிஸ் செயல்படுத்தினார். இதற்குப் பின்னால் பாதுகாப்புதான் காரணம் என்று அரசு கூறியுள்ளது, இருப்பினும் முன்பு மக்கள் ஒரே பாஸ் மூலம் பல அமைச்சர்களைச் சந்தித்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது அப்படி இல்லை. இப்போது மக்கள் பாஸ் வழங்கப்பட்ட அமைச்சரை மட்டுமே சந்திக்க முடிகிறது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் சில அதிகாரிகளை உதவிச் செயலாளர்களாக ஃபட்னாவிஸ் நியமித்துள்ளார். அவர்கள் நேரடியாக முதல்வர் அலுவலகத்திடம் ரிப்போர்ட் கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த முறை ஃபட்னாவிஸ் முதல்வராக இருப்பதால், முதல்வர் அலுவலகத்தில் அனைத்து துறைகளையும் கண்காணிக்கவும், வெளிப்படைத்தன்மை பராமரிக்கவும் ஃபட்னாவிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறுகின்றனர். எந்தவொரு துறையிலும் ஏதேனும் முறைகேடு நடந்தால், அரசின் முதல்வராக ஃபட்னாவிஸ் எதிர்க்கட்சியின் இலக்காக இருப்பார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா உடன் பேச வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்..! அதிர வைத்த மோடியின் திடீர் அறிக்கை..!