மொழித்திணிப்பு தேவையில்லை, தொழில்நுட்பம் தான் தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார். பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டது தான் திராவிட இயக்கம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆதிக்க ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம் என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஒருவர் விரும்பும் மொழிக்கு நாங்கள் எதிரிகள் அல்ல என்று கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், எங்கள் மீது எந்த மொழியையும் திணிக்காதீர்கள் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஓகே சொன்ன விஜய்...எதுக்காக தெரியுமா?

அறிவியலைப் புறக்கணிக்கும் பாஜகவும் அதன் நிர்வாகிகளும் மொழித்திணிப்பை கட்டாயமாகின்றனர். ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வது தான் மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கு பயனளிக்கும் என தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநராக இருந்ததால் தமிழிசை தெலுங்கு கற்றுள்ளார், அதனால் தெலுங்கில் வாழ்த்தி உள்ளார் என்றும் தமிழிசை பள்ளி பருவத்திலேயே தெலுங்கு கற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் ஆளுநராக பொறுப்பேற்றவுடன் தான் தெலுங்கு கற்றுக் கொண்டார் என்றும் விளக்கியுள்ளார்.

ஒரு மொழியை வலிந்து பழக வேண்டாம், தேவைக்கேற்ப கற்றுக்கொள்ளலாம் என்பதை தமிழிசை உறுதிப்படுத்தி உள்ளார் என்று தெரிவித்த முதலமைச்சர், தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்தில் ஹிந்தி இடம்பெறவில்லை, அதுதான் தமிழ்நாட்டில் நிலவும் உணர்வின் வெளிப்பாடு என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இளையராஜா செய்த தரமான சம்பவம்... வீடு தேடி வந்த ஸ்டாலின்!!