மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சற்று அதிகரித்துள்ளது. உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை தேடி அவ்வப்போது வனவிலங்குகள் மக்கள் வசப்படத்திற்குள் நுழைவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. கோவையில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றே கூறலாம். அவ்வப்போது உயிர் சேதங்கள் நிகழ்வதும் சகஜமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கோவை வெள்ளையங்கிரி மலை அடிவார பகுதியில் உணவு கூடத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ஒன்று, தண்ணீர் கேனை தூக்கிச்செல்லும் காட்சிகளும் வனத்துறையினர் அதனை வாகனத்தில் விரட்டிய போது வாகனத்தை ஆக்ரோஷமாக யானை முட்டி தள்ளிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

முன்னதாக கோயில் முன்பு இருக்கும் பூஜை பொருட்கள் கடைகள் அன்னதான கூடம் உள்ளிட்டவைகள் உள்ளதால் உணவு தேடிவரும் யானைகள் அவற்றில் புகுந்து கிடைக்கும் உணவை சாப்பிட்டு செல்கின்றன. முன்னதாக தண்ணீர் கேன் எடுத்துச் சென்ற ஒற்றை யானை சிறிது நேரம் கூட உணவு கூடத்திற்கு அருகையே முகாமிட்டு இருந்தது பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இது குறித்து பக்தர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் வாகனத்தில் ஒலி எழுப்பி ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். வாகனத்தின் சத்தம் கேட்டு சில மீட்டர் தூரம் வேகமாக ஓடிய காட்டு யானை ஒரு கட்டத்தில் திரும்பி நின்று வனத்துறை வாகனத்தையும் முட்டி தள்ளியது.
இதையும் படிங்க: இதுக்கு மேல போ முடியாது.. பாதியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்.. மூன்று கி.மீ., வரை உடலை தூக்கிச் சென்ற அவலம்..
இதையும் படிங்க: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. 50 வருடம் பின்னோக்கி சென்று விட்டதாக நெகழ்ச்சி..!