தென் மண்டல எல் பி ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளுக்கு இடையே கோவையில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் தென் மண்டல எல் பி ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுபாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி தென் மாநிலம் முழுவதும் உள்ள எல் பி ஜி கேஸ் டேங்கர் லாரிகள் இன்று (27-3-2025) காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தென் மாநிலம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐ.ஓ.சி , பி.பி.சி ,ஹச் பி சி ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதையும் படிங்க: வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!
எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் இடையே இன்று (27-3-2025) மாலை கோவையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை எனவே தங்களது போராட்டம் தொடரும் என தென் மண்டல எல் பி ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் திரு சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய கும்பல்.. வீடியோ காலில் கொலை மிரட்டல்..!