மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டபோது, 334க்கும் அதிகமான அணுகுண்டுகள் வெளித்தள்ளும் சக்தியைவிட அதிகமாக சக்தியை வெளியிட்டிருக்கும் என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அடுத்த ஒரு மாதத்துக்கு மியான்மர், தாய்லாந்தில் ஆஃப்டர் ஷாக் எனப்படும் பூகம்பத்துக்கு பிந்திய அதிர்வுகள் தொடர்ந்து இருக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

மியான்மர், தாய்லாந்தில் கடந்த 29ம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 2300க்கும் மேற்பட்டோர் காயமைடந்துள்ளனர். இன்னும் கட்டிட இடிபாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தில் 6.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: 1600ஐ தாண்டிய மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை... தொடரும் தேடுதல் பணி..!
இந்நிலையில் புவிவியல் வல்லுநர் ஜெஸ் ஃபோனிக்ஸ் சிஎன்என் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டபோது 334க்கும் அதிகமான அணுகுண்டுகளை வெடிக்கச் செய்யும்போது ஏற்பட்ட சக்தியைவிட அதிகமான சக்தியை வெளித்தள்ளும். இந்த பூகம்பத்தால் உயிரிழப்பு 10 ஆயிரமாக உயரும் என முன்பு கணக்கிட்டோம்.

இத்தோடு பூகம்பம் முடிந்திவிடாது, பூம்பத்துக்கு பின் ஏற்படும் பிந்தைய தொடர் அதிர்வுகள் அடுத்த ஒரு மாதத்துக்குஇருக்கும். இந்திய தக்கான தட்டுகள் தொடர்ந்து யூரோஏசியன் தட்டுகளுடன் மோதுவதால், மியான்மர் பகுதியில் நிலஅதிர்வுகள் தொடரும்.
மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், பேரழிவின் முழு அளவையும் உலகம் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறது. மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டுப் போரினால், அங்கு பேரழிவு மேலும் மோசமடையும் “ என எச்சரித்துள்ளார்.
மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு உதவ ஆப்ரேஷன் பிரம்மா என்ற திட்டத்தை இந்தியா தொடங்கி 15 டன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் வழங்கியுள்ளது. இதில் போர்வைகள், தார்பாய்கள், மருத்துவ உபகரணங்கள், பாய்,மெத்தை, சோலார் விளக்கு, உணவுப்பொருட்கள், சமையல் பொருட்கள், பாத்திரங்கள் அடங்கும்.

சீனாவும் 37 பேர் கொண்ட மீட்புப்படையை யாங்கோனுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழுவினர் அவசர உதவிக் கருவிகள், உயிர்காக்கும் கருவிகள், இடுபாடுகளில் சிக்கியிருப்பவர்களை கண்டறியும் கருவி, பூகம்பம் எச்சரிக்கை கருவி, ட்ரோன்களுடன் வந்துள்ளனர். ரஷ்யா சார்பில் 120 மீட்புப்படையினர் மியான்மருக்கு மீட்புப்பணிக்காக விரைந்துள்ளனர்.
மியான்மரில் ஆட்சி செய்யும் ராணுவ அரசு, அங்குள்ள 7 மண்டலங்கள், மாநிலங்களில் அவசரநிலையை தலைநகர் நேபிடா மற்றும் மண்டலேவிலும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை: தொழுகையின் போதே நிலநடுக்கத்தால் 100 பேருக்கு நிகழ்ந்த பரிதாபம்..!