ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பிறகு, குற்றவாளிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் 121வது எபிசோடில், இந்த தாக்குதலின் குற்றவாளிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். இந்தியா பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது என்றும், இந்த முறை எந்த பெரிய அடியிலிருந்தும் நாடு பின்வாங்காது என்றும் அவர் தெளிவாகக் கூறினார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தளத்தில் ராணுவ வீரர்களின் பலத்தை காட்டும் வகையுஇல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்'' என தெரிவித்து இருந்தது. இதற்கு அரபு நாட்டை சேர்ந்த ஒரு பயனர், ''பாகிஸ்தான் அல்லாஹ்வின் பெயரை தவறாக பயன்படுத்துகிறது'' என கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள ஃபெளஜீத் ஃபிஸா என்ற பெண் பயனர், ''அரேபிய சிறுவர்களே எங்கள் உலகிற்கு வாருங்கள்'' எனப் பதிலளித்துள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அந்தப்பெண் சட்டவிரோதமாக அரபு அடையாளத்தைக் குறிவைத்துத் தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா, பாகிஸ்தானை அழித்துவிடும்... சீனாவால் எதுவும் செய்ய முடியாது... அமெரிக்கா அமைதியாக இருக்கும்..!
பாகிஸ்தான் அல்லாஹ்வின் பெயரை இராணுவச் சூழலில் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார் அந்த அரேபிய பயனர். அவருக்கு மோசமான பதிலளித்துள்ள ஃபெளஜீத் ஃபிஸா என்ற பெண் பயனரை எக்ஸ்தளத்தில் பெரும்பாலும் இந்தி, தமிழ் பயனர்கள் பின்தொடர்வதால் அவர்கள் அரபு அல்ல, இந்தியராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானை கேலி செய்து இதற்கு பதிலடி கொடுத்துள்ள சில பயனர்கள், சவுதி அரேபியா ஆண்கள், பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்வது 2014ல் தடை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடுள்ளனர்.

கேடுகெட்ட பெண் ஃபெளஜீத் ஃபிஸாவின் எக்ஸ் தள பக்கத்தை ஆராய்ந்ததில் அவரது பதிவுகள் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பெரும்பாலும் உள்ளது. அவரது ஒரு பதிவில், ''ஒரு சராசரி பாகிஸ்தானியர் படுக்கையில் நீண்ட நேரம் நீடிப்பார். பின்னர் ஐஎன்எஸ் விக்ராந்த் (இந்திய வீரர்கள்) பாகிஸ்தான் கடல் அருகே நீடிப்பார். பெரிய கூர்மையான ஏவுகணையைப் (பாகிஸ்தான் வீரர்கள்) பார்த்த பிறகு முட்டாள் மனிதர்கள் திரும்பி ஓடுவார்கள். பாகிஸ்தான் ஏவுகணை மேலாதிக்கம்'' என இரட்டை அர்த்தத்தில் பதிவு செய்துள்ளார்.
''இந்த *** இந்திய இராணுவத்தில் ஏன் சேர்ந்தோம் என்று வருத்தப்படும் *** இந்திய வீரர்கள். பாகிஸ்தானை எதிர்க்கும் முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தியாவுக்கு தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க செலவிடுவார்கள் என்று மாண்புமிகு எம்.ஏ. ஜின்னா கூறினார். இன்று ட்விட்டரில் இந்திய முஸ்லிம்கள் அவர் சொல்வது சரி என்று நிரூபித்து வருகின்றனர்'' எனப் பதிவு செய்துள்ளார். அவருக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவால் பீதி... கராச்சியில் 144 தடை உத்தரவு..! இஸ்லாமிய நாடுகளிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!