பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திராவிட வம்சத்தின் தவறான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நேற்று திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசின் செயல்பாடுகளையும் அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது என அமித்ஷாவை நேரடியாக சாடினார். அதுமட்டுமல்லாது தமிழகம் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று பேசி இருந்தார். இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதற்றம் தணியவில்லை என்று பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் பதற்றமாக இருக்கிறார் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். ஏன் இவ்வளவு பதற்றம் முதல்வரே? மேலும் இன்னும் 11 மாதங்களில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகப் போகிறார் என்றும் 2026க்கு முன்பு நமது நாட்டை நக்சலிசத்தின் கொடுமையிலிருந்து விடுவிப்பதாக அவர் சபதம் செய்துள்ளதாகவும், அரசியல் சாணக்கியர் அமித்ஷாவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் மோடியும் திராவிட வம்சத்தின் தவறான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் கூறினார். தோல்வி பயத்தில் பேசியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் வருத்தப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழிசைக்கு நேரில் ஆறுதல்; திடீரென அமித் ஷா பிளானில் ஏற்பட்ட மாற்றம் - யார் அந்த 7 பேர்?
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்..!