நகரமயமாக்கல் மற்றும் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் மனிதர்கள் உடல்நிலையில் அதிக அளவு மாற்றத்தையும், நோய் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக மைதாவினால் செய்த உணவுகள் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில் சிறார்களும், பெரும்பாலனா இளைஞர்களும் துரித உணவு உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகி தொடர்கிறது. இதனால் பலருக்கு உணவுக்குழாயில் அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அனைத்து உணவகங்களிலும் தொடர் ரெய்டு நடந்தது.

சென்னை ஆவடி திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் 11 வயது மகன் சுதர்சன், தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளான். துரித உணவுகள் மற்றும் ஹோட்டல் உணவுகளை விரும்பி சாப்பிடும் சிறுவன், கடந்த திங்கள் கிழமை அன்று இரவு உணவாக கடையில் வாங்கிய பரோட்டாவை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அன்றிரவு முதலே வயிற்றில் சிறு உபாதைகளால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான். அதற்கு அடுத்த இரண்டு தினங்களாக சிறுவன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி பலமுறை சீரழித்த இளைஞன்.. உயிருக்கு போராடும் இளம்பெண்.. ஒருதலைபட்சமாக நடக்கும் போலீஸ்..?

நாளுக்கு நாள் சிறுவனின் வயிற்று வலி அதிகமாகவே, திருமுல்லைவாயில் உள்ள கிளினிக்கிற்கு சிறுவனை அவனது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு இருந்த டாக்டர், சிறுவனை உடனே அரசு மருத்துமனைக்கு அழைத்து செல்லும் படி அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர், அவனை ஆவடி அரசு மருத்துவமனைக்க்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் சிறுவனின் வயிற்றில் ஏதேனும் பிரச்னை உள்ளதாக என ஸ்கேன் செய்து பார்த்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவனுக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சிறுவன் மீண்டும் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளான். வயிற்று வலியால் சிறுவன் கதறிய நிலையில், அவனது பெற்றோர் திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். எனினும் சிறுவன் பரோட்டா சாப்பிட்டு வயிறு வலி ஏற்பட்டு இறந்து போனாரா அல்லது முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால் இறந்து போனாரா என்ற கோணத்தில் திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன் இதுபோல, கோவில்பட்டியில் பரோட்டாவையும் குளிர்பானத்தையும் அடுத்தடுத்து உண்ட தாயும் மகளும் உயிரிழந்ததாக செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் கோவையில் பரோட்டா சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும், சத்தான ஆகரங்களை மட்டுமே வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டார்ஜிலிங், ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா.. சென்னையில் விற்பனை செய்த பெண்கள் உட்பட 7 பேர் கைது..