தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் வேலைக்காக செல்லும் ஊர் என்றால் அது சென்னைதான். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் தான் பணியாற்றி வருகின்றனர். பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம் மற்றும் பண்டிகை காலங்களில் காலியாக காட்சியளிக்கும் சென்னை ஆகியவையே இதற்கு சான்றாக கூறலாம். இவ்வாறு தமிழகத்தில் எப்படி சென்னையோ அதுபோல் தென் இந்தியாவிற்கு பெங்களூர்.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பெங்களூரில் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு தென் இந்தியாவின் மிக முக்கிய நகரங்களாக பெங்களூர் மற்றும் சென்னை விளங்குகிறது. பணி மட்டுமின்றி தொழில், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இரு நகரங்களுக்கு இடையே நாள்தோறும் பல லட்சம் பேர் பயணிக்கின்றனர். சாதரனமாக சென்னையில் இருந்து பெங்களூருக்கு சாலை வழியாக செல்ல சுமார் 7 மணி நேரம் ஆகும். அதனை குறைக்கும் நோக்கில் சென்னை - பெங்களூர் இடையே அதிவிரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மனைவியை தாக்கிய கள்ளக்காதலன்.. கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவன்.. மருத்துவமனை வாசலில் அரங்கேறிய சம்பவம்..!

சுமார் 17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த விரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு 4 மணி நேரத்தில் செல்ல முடியும். மேலும் இதன் மூலம் போக்குவரத்து நெரிசலையும் தடுக்க முடியும் என கூறப்படுகிறது. இதில் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட நிலையில் இன்னும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இன்னும் பனிகள் முடிக்கப்படாத நிலையில் உள்ளது.

முன்னதாக இந்த சாலை 2025 ஆகஸ்ட் மாதம் முழுவதும் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது பணிகள் முடிக்கப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த நிலையில் ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் இந்த விரைவுச்சாலை தொடர்பாக எம்.பி. லஹர் சிங் சிரோயா கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த நிதின் கட்காரி, சென்னை- பெங்களூர் விரைவுச்சாலையில் மீதமுள்ள பகுதி ஜூன் 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் முழுவதுமாக முடிவதில் தொடர்ந்து தாமதம் ஆகிக்கொண்டே வருவது வாகன ஓட்டிகளுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுப்பதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மனநலம் பாதித்த மூதாட்டி கொலை.. சுத்தியலால் அடித்து கொன்ற பேரன்.. சாப்பிட மறுத்ததால் அடித்ததாக விளக்கம்..!