திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி. வயது 85. மனநலம் குன்றிய நிலையில் உள்ள மூதாட்டியை அவரது மகள் பிரேமா குடும்பத்தினர் கவனித்து வந்துள்ளனர். சரஸ்வதியின் பேரன் பத்மநாபன் வயது 23. மீஞ்சூர் காவல் நிலைய பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகிறார். அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொண்டக்கரை மனோகரன் கடந்த 2022ஆம் ஆண்டு லாரி ஏற்றி கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கு உட்பட பல்வேறு வழக்கு பத்மநாபன் மீது நிலுவையில் உள்ளது.

கஞ்சா கடத்தல் வழங்கி கைதான பத்மநாபன் அண்மையில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மூதாட்டி சரஸ்வதி மனநலம் குன்றிய நிலையில் அவ்வபோது யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை வீட்டின் வெளியே அமைந்துள்ள அறையில் உள்ள கட்டிலில் சங்கிலியால் கட்டிப்போட்டு வைத்து கவனித்து வந்துள்ளனர்.
இன்றும் காலையில் மூதாட்டி திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. உறவினர்கள் அனைவரும் தேடிய நிலையில் பேரன் பத்மநாபன் பாட்டியை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: குடித்துவிட்டு தகராறு செய்த மருமகன்.. உருட்டு கட்டையால் அடித்து கொலை.. தென்னைமரத்தில் தூக்கிலிட்ட மாமனார், மாமியார்..!

பேரன் பத்மநாபன் பாட்டி சரஸ்வதியை வீட்டிற்கு அழைத்து வந்த உடன், பாட்டிக்கு சப்பாத்தி கொடுத்து சாப்பிட சொல்லி உள்ளார். ஆனால் சரஸ்வதி சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது. மீண்டும் மீண்டும் பத்மநாபன் சாப்பாடு ஊட்டவே, பாட்டி சரஸ்வதி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பத்மநாபன் அங்கிருந்த சுத்தியலால் பாட்டி சரஸ்வதியின் தலையில் அடித்துள்ளார். அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே பாட்டி சரஸ்வதி உயிர் இழந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல்துறையினர் பாட்டி சரஸ்வதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாட்டியை சுத்தியலால் அடித்து கொலை செய்த பேரன் பத்மநாபன் மீஞ்சூர் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநலம் குன்றிய பாட்டியை பேரனே சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை.. கைவிட்ட காதலர்கள்.. தேடிப்பிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீசார்..!