பாரதிய ஜனதாவின் அரசியல் பதிவை டெல்லி தேர்தல் அதிகாரி ஒருவர்தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புகார் அளித்த ஆம் ஆத்மி கட்சி அதை ரகசியமாக பகிர்ந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி இருக்கிறது.

டெல்லி சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம் பி சஞ்சய் சிங் புதுடெல்லி மாவட்ட தேர்தல் அதிகாரி தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் பாஜகவின் தகவல் ஒன்றே ரகசியமாக மறு பகிர்வு செய்து இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: மன்மோகன் சிங் மீது திடீரென பாஜகவுக்கு அக்கறை: காங்கிரஸிடம் புதிய கோரிக்கை..
அந்த பகிர்வை 'கிரீன் ஷாட் ' எடுத்து பகிர்ந்து இருக்கும் சஞ்சய் சிங், "இந்திய வரலாற்றில் முதன்முறையாக டெல்லி தேர்தல் அதிகாரி ஒருவர் பாஜகவின் பதிவை ரகசியமாக மறு பகிர்வு செய்து இருக்கிறார். அந்த அதிகாரி முறைப்படி பாஜகவில் இணையலாம். நீங்கள் பாஜகவை நேசித்தீர்கள் என்றால் அதை சொல்வதற்கு அச்சம் ஏன்?. மாவட்ட தேர்தல் அதிகாரி தற்போது பாஜகவில் இணைந்து பகிரங்கமாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்து விட்டார்"என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவருடைய இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த தேர்தல் அதிகாரி தனது சமூக வலைத்தள கணக்குகளை அதிகாரி ஒருவர் நிர்வகித்து வருவதாகவும், தவறுதலாக ஏற்பட்ட இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்து இருக்கிறார்.
தவறுதலாக மறு பதிவு செய்த அந்த அதிகாரி உடனடியாக வேறு பிரிவுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு விட்டார் என்றும் தேர்தல் அதிகாரி குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: வீடு, கார் இல்லை: 1.73 கோடிக்கு சொத்துக்கள்; பிரமாண பத்திரத்தில் கெஜ்ரிவால் தகவல்...