போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு ஜூன் 26 தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து, ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது.. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ.பாரதி ஆவேசம்..

இந்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுக்கள் குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

போதைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களான சூடோபெட்ரினை, சத்துமாவு பாக்கெட்டுக்களில் மறைத்து வைத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு கடத்துவதாக டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு டெல்லி கைலாஷ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: திமுக எம்.பி.9-வது இடம்! மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரின் சராசரிச் செலவு: தேர்தல் ஆணையம் அறிக்கை