தமிழ்நாட்டில் கடந்த 3-ந் தேதி +2 பொதுத்தேர்வுகள் தொடங்கி மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், ப்ளஸ் 1 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி உள்ளன.
இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 பேர் எழுத உள்ளனர். இதுதவிர தனித்தேர்வர்களாக 4 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 137 பேரும் பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத் தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 470 பறக்கும் படைகளும், தேர்வுப் பணிகளில் 44 ஆயிரத்து 236 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: பார்வைத்திறன் குறைபாடு +2 மாணவர்கள்... கணினி வழியில் தேர்வு எழுத நடவடிக்கை...

முதல் நாளில் தமிழ் உள்பட இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடக்க இருக்கிறது. இன்று தொடங்கும் தேர்வு, வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 முதல் 4 நாட்கள் வரை இடைவெளி விட்டு நடைபெறுகிறது.
தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தவறுகள் ஏதேனும் செய்யாமல் இருப்பதை கண்டுபிடிக்க பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று தேர்வர்கள் வசதியாக தேர்வினை எழுத காற்றோட்டம் உள்ள அறை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் போன்றவற்றை செய்து வைத்திருக்கும்படி பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 19-ந் தேதி வெளியாக உள்ளன. அதே தினத்தில் தான் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகளும் வெளியாகின்றன. ஆனால் +2 பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ந் தேதி வெளியாகும்.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியம் என்றாகிவிட்ட நிலையில், +2 மாணவர்கள் சிறப்பான கட்-ஆப் எடுத்தால் மட்டுமே உயர்கல்வியில் பிற படிப்புகளில் சேர முடியும் என்பதால், சமீப ஆண்டுகளாக மாணவிகளுக்கு இணையாக மாணவர்களும் அதிக மதிப்பெண்களை பெற்று வருகின்றனர். எனவே இந்தமுறையும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சாம்பல் புதன்! கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி