திமுகவை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும் என்றார் தினகரன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை விளார் சாலையில் வி.கே. சசிகலா கணவர் ம. நடராசன் நினைவிடத்தில் அவரது 7வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு அவரது சமாதியில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவது வித்தியாசம் இல்லை. அனைவரும் ஜெயலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள்தான் என்றார்.
இதையும் படிங்க: “with பழனிசாமியா” “without பழனசாமியா”... எடப்பாடியாருக்கு கெத்தா சவால் விட்ட டிடிவி தினகரன்...!

தமிழ்நாட்டின் ஜீவாதாரத்தை பாதிக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக் கட்டுவதற்கு காரணமான கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை சோனியா காந்தியுடன் எடுத்துக் கூறி தடுப்பதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மேற்கொள்ளவில்லை. மாறாக அவரது செயலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்குத் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட தொண்டர்கள் முன் வர வேண்டும். இதில் யார் தலைவர் என கௌரவம் பார்ப்பது சரியாக இருக்காது. திமுகவை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும் என்றார் தினகரன்.

அதிமுகவில் ஏற்கனவே பொதுச்செயலாளர் யார் என்பதில் பஞ்சாயத்து ஏற்பட்டு தான் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே விரிசல் விழுந்தது. தற்போது அந்த விரிசலை சரி செய்ய பாஜக தலைமையும், அதிமுக அபிமானிகளும் படாதபாடு பட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் செங்கோட்டையைன் - எடப்பாடி இடையிலான சிக்கல் வேறு இடியாப்பம் போல் சிக்கலாகிக் கொண்டே போகிறது. இதனிடையே தகுதியுடைய தலைவரை தேர்வு செய்யலாம், முதல்ல ஒன்றிணையுங்கள் என பேசியிருப்பது, ஒருவேளை டிடிவி தினகரன் தன்னை மனதில் வைத்துக் கொண்டு தான் பேசியிருக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணா மட்டும் இருந்திருக்கணும்.. மும்மொழியை ஏற்றுக் கொண்டிருப்பார்.. டிடிவி தினகரன் ஒரே போடு!