மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் வரிவீதம் அதிகரிப்பு, குறைப்பால் வரும் நிதியாண்டிலிருந்து சில பொருட்களின் விலை உயரவும், குறையவும் வாய்ப்புள்ளது.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8-வது பட்ஜெட்டை நாடாளுமந்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் வரிவிதிப்பு மாற்றங்கள், சுங்கவரி குறைப்பு, அதிகரிப்பால் பல பொருட்களின்விலையில் வரும் நிதியாண்டிலிருந்து மாற்றம் ஏற்படலாம்.

விலை குறையும் பொருட்கள்
மொபைல் போன்கள், சார்ஜர்கள் அது தொடர்பான கருவிகள்
தொலைத்தொடர்பு கருவிகள்
தங்க நகைகள்
மின்னனு பொம்மைகள்
தொழில்நுட்ப பணிகளுக்கு பயன்படும் ஆடைகள்
தோல்பொருட்கள்
புற்றுநோய் மருந்துகள்,அரிதான நோய்க்கான மருந்துகள்
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள்
பதப்படுத்தப்பட்ட மீன் பேஸ்ட், மீன்களுக்கான உணவுகள்
முக்கியமான தாதுப்பொருட்கள்
எல்இடி மற்றும் கடல்சார் பொருட்கள்
கப்பல் கட்டுவதற்கு தேவைப்படும் கச்சா பொருட்கள்
உணவு மற்றும் குளிர்பானங்களுக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள்
1600 சிசி மோட்டார் பைக்

விலை அதிகரிக்கும் பொருட்கள்
இறக்கமதி செய்யப்படும் தட்டையான எல்இடி டிவிக்கள்
இறக்குமதி செய்யப்படும் ஆடைகள்
ஸ்மார்ட் மீட்டர்கள்
இறக்குமதி செய்யப்படும் காலனிகள், ஷீ
பிவிசி, பிளெக்ஸ் பொருட்கள்
சோலார் செல்ஸ், மெழுகுவர்த்திகள் பட்ஜெட்டில் வந்துள்ள இந்த அறிவிப்புகள் 2025-26ம் நிதியாண்டிலிருந்து நடைமுறைக்கு வரும். ஜிஎஸ்டி வரிமுறைக்குள் வந்துவிட்டதால், பொருட்களின் வரிக் குறைப்பு, உயர்வு அனைத்தையும் ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்தகிறது. இங்கு தரப்பட்டுள்ள பொருட்களின் விலை குறைதல், அதிகரித்தல் என்பது சுங்கவரி குறைப்பு, நீக்குதல், அதிகரிப்பால் விலையில் மாற்றம் ஏற்படும். இந்த விலை குறைப்பு எப்போது இருந்து நடைமுறைக்கு வரும் என்பது சுங்கவரித்துறை அறிவிப்புக்குப்பின் தெரியவரும்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் "புடவைகளின் ரகசியம்" என்ன? ருசிகர தகவல்கள்
இதையும் படிங்க: இவ்வளவு சேமிப்பா! வருமானவரி உச்சவரம்பு உயர்வால் எவ்வளவு பணம் மிச்சமாகும் தெரியுமா?