ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை என அமைச்சர் கே.என்.நேரு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜல்லி, எம்-சாண்ட் விலையை தனிச்சியாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற சட்டமன்ற உறுப்பினருடைய கேள்விக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலும் பதிலளித்தார். டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களிலிருந்து வருகிற ஜல்லி, எம்-சாண்ட் ஆகியவை கடந்த இரண்டு மாதங்களாக நாகை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு வரவில்லை எனவும், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, நாகை மாலி, வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: அவர் இருந்தா முடியாதுங்க… அடம்பிடிக்கும் இ.பி.எஸ்: கூட்டணிக்காக அண்ணாமலையை காவு கொடுக்கும் பாஜக..?

மேலும் கலைஞர் வீடு திட்டம் உட்பட கட்டுமான பணிக்கு தேவையான ஜல்லி, எம்-சாண்ட் கடந்த 2 மாதங்களாக வரவில்லை எனவும், ஒரு யுனிட் 2 ஆயிரம் எனவிருந்த எம்.சாண்ட் திடீரென 4 ஆயிரம் என உயர்த்தப்பட்டதாகவும் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் புகார் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய பொதுத்துறை எ.வ.வேலு, “ஜல்லி, எம்-சாண்ட் விலையை கிரஷர் உரிமையாளர்கள் தன்னிசையாக உயர்த்திய தகவலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார். ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்த அனுமதிக்க கூடாது என தலைமை செயலர் மூலம் ஆட்சிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதையும் மீறி தன்னிச்சையாக ஜல்லி, எம்-சாண்ட் விலையை உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையிலேயே எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஜல்லி மற்றும் எம் சாண்ட்-டின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: விதிகளில் தளர்த்தம் செய்து பணியிட மாற்றம்.. செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு..!