ஆஸ்திரேலியாவில் விமானம் ஒன்றில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நுழைய முயன்ற 17 வயது சிறுவன், என்னிடம் துப்பாக்கி மட்டுமல்ல வெடிகுண்டுகளும் இருப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 160 பயணிகளுடன் மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு புறப்படவிருந்த ஜெட்ஸ்டார் விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது.

துப்பாக்கியுடன் விமானத்திற்குள் நுழைய முயன்ற சிறுவன், ஊழியர்கள் மற்றும் பயணிகளால் தாக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டான். அவலோன் விமான நிறுவன ஊழியர்களின் புகாரைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதையும் படிங்க: ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
அந்த விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வேலியில் இருந்த ஒரு துளை வழியாக க சிறுவன் விமான நிலையத்திற்கு ஊடுருவியுள்ளதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்தோடு, சிறுவனுக்கு சொந்தமான மேலும் இரண்டு பைகள் மற்றும் வாகனம் ஒன்றையும் காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த சிறுவனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விமானத்துக்குள் துப்பாக்கியுடன் ஏறும் போது அவன் கையில் இருந்த பைகளில் வெடிகுண்டுகளும் இருக்கலாம் என்ன சந்தேகம் ஏற்பட்டது. அதனால் சோதனைக்காக வெடிகுண்டு நிபுணர்களும் அழைக்கப்பட்டனர்.
அந்த சிறுவன் மெல்போர்னிலிருந்து 70 மைல் தூரத்தில் இருக்கும் விக்டோரியா பகுதியில் உள்ள பிராந்திய நகரமான பல்லாரட் பகுதியை சேர்ந்தவன்.
அந்த சிறுவன் சிட்னியில் நடைபெறும் கால்பந்து போட்டியை காண செல்வதாக கூறியதாக விமானத்தில் இருந்த பயணி ஒருவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எவ்வாறாயினும், சிறுவனால் விமானத்தில் இருந்த சுமார் 160 பயணிகளில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கைதுக்கு பிறகு விக்டோரியா சிறுவர் நீதிமன்றத்தில் அந்த சிறுவன் ஆஜர் படுத்தப்பட்டான். அப்போது இந்த வழக்கில், தான் ஜாமீன் கேட்க விரும்பவில்லை என்றும் தான் வைத்திருக்கும் பைகளில் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதாகவும் கூறினான்.
வெடிகுண்டுகள் மூலம் பயணிகளையும் விமான சிப்பந்திகளையும் மிரட்ட முயன்றதாகவும் அவன் தெரிவித்தான். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கால்பந்து போட்டியை பார்க்கும் ஆர்வத்தில் அவன் வந்திருக்கலாம் என்றாலும் இந்த அளவுக்கு திட்டம் போட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் பாரதிக்கு தப்பி வேலையில் உள்ள துணை வழியாக அவன் வந்திருப்பது சாமர்த்தியமாகத்தான் கருதப்படுகிறது. விசாரணை முடிந்த பிறகு மற்ற விவரங்கள் தெரியவரும்.
இதையும் படிங்க: ரன்வேயில் கழண்டு விழுந்த டயர்.. விமானத்தில் ஊசலாடிய பயணிகள் உயிர்.. உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..