பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம் நடத்தியபோது, பாகிஸ்தான் தூதரக அதிகாரி இந்தியர்களைப் பார்த்து கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என்ற செயல் கடும் அதிருப்தியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்த இடத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் 26 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றுவிட்டு தப்பினர். இந்த கொடூரமான சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு எதிராகவும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்துக்கு எதிராகவும் லண்டனில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரகம் முன் இந்தியர்கள், இந்திய வம்சாவழியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். “தீவிரவாதத்தை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்ற வாசகங்களும், “காஷ்மீரில் தீவிரவாதத்தை நிறுத்துங்கள்” என்றும், “தீவிரவாதத்தை நிறுத்துங்கள்” என்ற வாசகத்தோடும் , இந்திய தேசியக் கொடியைப் பிடித்து இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: அடிச்சி நொறுக்குங்க.. சொன்ன மாதிரியே செய்த மோடி.. தவிடுபொடியாகும் பாகிஸ்தான்..!

அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் கையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தை வைத்திருந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியர்களைப் பார்த்து, கையில் வைத்திருந்த அபிநந்தன் படத்தைப் பார்த்தும், மக்களைப் பார்த்தும் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இந்த காட்சியை வீடியோ எடுத்த இந்தியர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
2019ம் ஆண்டு பிப்ரவரியில் விமானப்படை கேப்டன் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு பின்னர்விடுவிக்கப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட சர்வதேச இந்திய சமூக நண்பர்கள் குழுவின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில் “காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் தீவிரவாதத்தை நிறுத்தக் கோருகிறோம் கண்டிக்கிறோம்.

சர்வதேச அளவில் ஸ்திரமான நடவடிக்கையும், இந்தியாவுக்கு ஆதரவாக பிரிட்டன் அரசு இருக்க வேண்டும், பாகிஸ்தானுக்கான கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் இந்திய விமானப்படை கேப்டன் அபிநந்தன் புகைப்படத்தை வைத்துக்கொண்டு காட்டுமிராண்டித்தனமாக மக்களைப் பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார். வெளிப்படையான விரோதத்தை மட்டுமல்ல, ராஜங்கரீதியான விதிகளையும், கண்ணியத்தையும் புறக்கணிப்பதை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்தார்.
இந்தியர்கள் போராட்டத்துக்கு பதிலடியாக பாகிஸ்தான் போராட்டக்காரர்கள் ஒலிபெருக்கியுடன் வந்து தேசபக்தி பாடல்களை இசைக்கவிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஒன்றல்ல, இரண்டல்ல 3 அரக்கன்களை களமிறக்க திட்டம்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகும் இந்தியா!