பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய ராணுவம் பழிவாங்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிற்கு எதிராக இவ்வளவு பெரிய சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளை இராணுவம் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து கொன்று வருகிறது. ஆனால் இந்த நேரத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு எக்ஸ்தள பயனர் தனது நாட்டின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் கூறியுள்ளது வைரலாகிருகிறது. இதைப் படித்த பலரும் பாகிஸ்தான் மக்களின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்படுகிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இதனால், பாகிஸ்தானிலும் அச்சத்தின் சூழல் நிலவுகிறது. இந்தியாவின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் மக்களும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர், தனது சொந்த நாட்டின் யதார்த்தத்தைப்பற்றி கூறியுள்ளார். இந்த நபரின் வார்த்தைகளுக்கு மக்கள் கடுமையாக எதிர்வினையாற்றுகிறார்கள்.
இதையும் படிங்க: பாகிஸ்தானியர்கள் 'படுக்கையில்' நீடிப்பார்கள்... 'கூர்மையை' பார்த்து இந்தியர்கள் திரும்புவார்கள்.. கேடுகெட்ட பெண்..!
பாகிஸ்தான் அதன் அண்டை நாடாக இருப்பது இந்தியாவின் துரதிர்ஷ்டம். ஏனென்றால் இந்தியா ஒரு போராடும், வளரும் நாடாக இருந்தாலும், பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி, அதிக பணவீக்கத்துடன் போராடி வருகிறது. பாகிஸ்தான் முற்றிலும் சர்வதேச நாணய நிதியத்தை சார்ந்து இருக்கிறார். நாட்டின் நிதி நெருக்கடிக்கு அங்கு நிலவும் அரசியல் ஸ்திரமின்மையும் முக்கிய காரணம்.

அரசிற்கும், இராணுவத்திற்கும் இடையிலான மோதல், பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக, பாகிஸ்தானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபரிலும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. மேஅங்குள்ள மக்களும் அரசின் மீது திருப்தி அடையவில்லை. இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு பாகிஸ்தானிய எக்ஸ்தளப் பயனர் ஒரு பதிவில்
''வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இந்தியா நம்மை அச்சுறுத்தக்கூடிய விஷயம் எதுவும் இல்லை. ஏனென்றால் நாங்கள் ஏற்கனவே எங்கள் அரசாங்கத்தின் மீது கோபமாக இருக்கிறோம்'' என அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. இந்த இடுகையை 18 ஆயிரம் பயனர்கள் விரும்பியுள்ளனர்.
the funniest shit is, there is absolutely nothing india can threaten us with that we aren’t already suffering from at the hands of our govt
pani rok louge? wese hi nahi aata
maar dou ge? humari govt maar hi rahi hai
lahore le lou ge? Le lo adhay ghantay baad khud wapis ker jaoge
— nma (@namaloomafraaad) April 24, 2025
மேலும், ''இந்தியா நமது தண்ணீரை நிறுத்துமா? என்னைக் கொன்னுடுவாயா? ஏற்கெனவே நமது (பாகிஸ்தான்) அரசாங்கம் கொலை செய்கிறது. லாகூரை எடுத்துக்கொள்வீர்களா? அதை எடுத்துக்கொள்ளுங்கள். அரை மணி நேரத்தில் நீங்களே திரும்பி வருவீர்கள்.'' எனவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிய நபரின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள பலரும், ''இந்த சூழ்நிலையிலும் கூட, பாகிஸ்தான் எந்த முன்னேற்ற அறிகுறிகளையும் காட்டவில்லை. அவர்களின் நிலை ஏற்கனவே மோசமாக உள்ளது, ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ய முடிகிறது'' எனத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியா, பாகிஸ்தானை அழித்துவிடும்... சீனாவால் எதுவும் செய்ய முடியாது... அமெரிக்கா அமைதியாக இருக்கும்..!