''அன்பு, பாசத்தில் ஒரு துளியும் குறைவில்லை. அவர் எப்போதுமே என் அன்பிற்குரிய தம்பிதான்'' என விஜயின் நட்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ''தவெக மாநாட்டில் விஜய் 'ஒய் ப்ரோ..? வாட் ப்ரோ..? என்று என்னை சொல்வதாக நினைக்காதீர்கள். நான் பேசியதை அவர் சொல்லி இருகிறார். அவர் என்னை சொன்னதாக எப்படி நினைக்க முடியும்? விஜய் என்னை சொல்லவில்லை. அவர் சொல்ல வந்தது ஆட்சியாளர்களை. நான் சொன்னதை திருப்பி அவர் அங்கே சொல்கிறார்.

கொள்கையாக, கருத்தாக மட்டுமே எனக்கும், என் தம்பி விஜய்க்கும் முரண்பாடு இருந்ததே தவிர, அன்பு, பாசத்தில் ஒரு துளியும் குறைவில்லை. அவர் எப்போதுமே என் அன்பிற்குரிய தம்பிதான். அரசியலாக அவர் வேறு தளத்தில் நிற்கிறார், நான் வேறு அரசியலில் இருக்கிறேன். நான் பெரியாரை ஏற்கவில்லை, அவருக்கு பெரியார் கொள்கை தலைவராக இருக்கிறார். அதில் தான் இரண்டு பேருக்கும் வேறுபாடு.
இதையும் படிங்க: திமுகவின் வாடகை வாய்… பதிலுக்கு நான் ஏதாவது செய்யாமல் விடமாட்டேன்… சீறும் சீமான்..!
போலீசாரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசு தரப்பில் இருந்து அழுத்தம் தரப்பட்டதுதான் காரணம். நானோ என் மனைவியோ மிகவும் மன உறுதியானவர்கள். உலகம் முழுவதும் எனக்கு சொந்தங்கள் இருக்கிறார்கள்.. என் பிள்ளைகள், தம்பிகள் வலியுடன் குரல் செய்திகளை பகிரும் போது எனக்கு வலி அல்ல.. வெறியாக இருக்கிறது. பலாத்கார புகாரால் பாதிப்பு இல்லை. இது என் வளர்ச்சிக்கு காரணமா என்பது தெரியாது.

எனக்கு இடையூறாக இருந்திருந்தால் புதியதாக சின்னங்களைக் கொடுத்தார்கள்; எந்த வேட்பாளரும் என் பிள்ளைகள் அறிமுகமான பிள்ளைகள் இல்லை. நானும் புகழ்பெற்ற நடிகனோ, தலைவரின் மகனோ இல்லை. எங்களை நம்பி 36 லட்சம் வாக்குகளைக் கொடுத்து தனித்தே நின்று அங்கீகரத்தை தந்துள்ளனர். அப்படியானால் இப்படியான புகார்களால் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றுதானே அர்த்தம்.
காதல் என ஒன்று இருந்திருந்தால், காதலித்த ஒரு பெண் உலகத்தில் யாராவது ஒருவர் இப்படி முச்சந்தியில் நின்று இப்படி கத்திக் கொண்டு இருப்பாங்களா? இது காதலா? கன்றாவியா? எதையாவது பேசிக் கொண்டிருக்காதீங்க.. எந்த ஒரு பாலியல் வன்புணர்வுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை நீங்கள்.. ஏனெனில் அங்கே சீமான் இல்லை.. இங்கே சீமான் இருக்கிறான்... சீமானை சீண்டனும்.. ஏனெனில் ஒன்றே ஒன்றுதான்.. அவர்களால் என்னை சமாளிக்க முடியவில்லை. என்னுடைய உளவியல் என்பதே இவர்களை உளவியலாகா சாகடிப்பதுதான்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து..! விசாரணைக்கு பின் சீமான் பேட்டி...!