சுவிட்சர்லாந்து நாட்டின் பாசல் நகரில் உயர் பாதுகாப்பு அச்சிடும் (இ எம் இ ஏ) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியிடப்படும் வங்கி நோட்டுகளில் எந்த நாட்டு நோட்டுகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன என்பது குறித்த தேர்வு நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த 500 திர்ஹாம் நோட்டுகள் தான் வடிவமைப்பிலும் அழகிலும் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதை தட்டிச் சென்றது. இந்த நோட்டு 3டி டிசைன்களுடன் பாயில் ஸ்ட்ரைப்களை கொண்டதாகும்.

இந்த நோட்டுகளில் மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யானால் வகுத்த கொள்கையின்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அர்ப்பணிப்புக்கு சான்றாக எக்ஸ்போசிட்டி துபாயில் உள்ள டெர்ரா சஸ்டைனபிலிட்டி பெவிலியனின் கட்டிட கலையின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 350 ரூபாய், 5 ரூபாய் புதிய நோட்டுகள் வெளி வருகிறதா? 200 ரூபாய் நோட்டு செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
பின்புறத்தில் துபாயில் இருக்கும் எதிர்காலஅருங்காட்சியகத்தை எடுத்துக் காட்டுகிறது. இது கடந்த காலத்தை எதிர்காலத்துடன் ஒரு கட்டிடக்கலை மற்றும் பொறியியல் கலையுடன் அற்புதமாக இணைக்கிறது.
பாலிமர் பண தாளின் பின்புறத்தில் எமிரேட்ஸ் டவர்களின் படம் மற்றும் வலது பக்கத்தில் 160 க்கும் மேற்பட்ட தளங்களைக் கொண்ட 828 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான கட்டிடம் ஆன பர்ஜ் கலீபா ஆகியவை சூரிய சக்தியிலிருந்து அதிக சக்தியை பெறுவதால் நிலைத்தன்மையின் ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது.

பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களும் ரூபாய் நோட்டை அடையாளம் கண்டு அதன் மதிப்பை நிர்ணயிப்பதில் உதவும் வகையில் முக்கிய சின்னங்களும் இந்த ரூபாய் நோட்டில் சேர்க்கப்பட்டு இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
இந்த புதிய ரூபாய் நோட்டுகள் பாரம்பரிய ரூபாய் நோட்டுகளை விட நீண்ட காலம் நீடித்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த நோட்டுகளில் சமீபத்திய தொழில்நுட்பம் குறிப்புகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தியதற்காகவும் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் அறிவித்தனர்.
இந்தத் தொழில்நுட்பங்கள் முன்னர் விருது பெற்ற சிறந்த புதிய ரூபாய் நோட்டு 2023 பதிப்பான ஏஇடி 100 ரூபாய் நோட்டில் பயன்படுத்தப்பட்டன. மத்திய கிழக்கில் மிகப்பெரிய மேற்பரப்பில் பயன்படுத்துவதற்கு படலை கோடுகளைக் கொண்ட ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட முதல் நாடாக அமீரகம் சாதனை படைத்திருக்கிறது.
பாலிமர் தொடரின் ஒரு பகுதியான இந்த நோட்டுகள் அந்த நாட்டுக்கு சொந்தமான துணை நிறுவனத்தில் அச்சிடப்பட்டு 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி அன்று புழக்கத்துக்கு வந்தது.
இதையும் படிங்க: வங்கி டெபாசிட்களுக்கான காப்பீடு ரூ.12 லட்சமாக உயர்கிறது? விரைவில் மத்திய அரசு அறிவிப்பு..!