ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை இந்திய ராணுவ படையினர் வேட்டையாடி வருகின்றனர். பாரமுல்லாவில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்., அதனைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகள் தங்கி இருக்கும் இடங்களை சுற்றி வளைத்து தகர்த்து வருகின்றனர். குறிப்பாக இன்று பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகளின் வீடுகளை இந்திய ராணுவ படையினர் தகர்த்தனர். இந்த நிலையில் பந்திபோரா என்ற பகுதியில் இந்திய ராணுவத்தினரும் ஜம்மு காஷ்மீர் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது லஷ்கர் இயக்கத்தின் முன்னணி தளபதி அல்தாப் லல்லி என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேடுதல் வேட்டையின்போது இரண்டு பாதுகாப்பு படையினர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து..! முட்டுக்கொடுக்கும் பாகிஸ்தான்..!
இதையும் படிங்க: எல்லையை மூடிய பாகிஸ்தான்... இந்திய விமானங்களுக்கு தடை! வெடிக்கும் சர்ச்சை...