அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கோவை இந்திய உணவு கழக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணித்தலைவருமான வானதி சீனிவாசன் மாலை அணவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நயினார் நாகேந்திரன் பதவியேற்று 24 மணி நேரம்தான் ஆகிறது.
மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தேர்தல் அரசியல், கட்சி பணி என அனைத்திலும் தனக்கென ஒரு முத்திரை பதித்து செயல்பட்டு இருக்கிறார். பாஜகவில் தலைமை பொறுப்பு என்பது, வரிசையில் முன் நிற்ககூடிய நபர் தலைவர் என தெரிவித்தார்.மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன் அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர் என தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி விரிவுபடுகின்ற பொழுது, கட்சியிலே பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வருவதும், அவர்களுக்கு முக்கியமான பொறுப்பு வழங்கி அவர்களது செயல்பாட்டை பார்ப்பதும் தமிழகத்தில்மட்டுமல்ல பல்வேறு மாநலங்களில் நடைபெறுகின்றது. நயினார் நகேந்திரன் தலைமை என்பது புதிய நபர்களை கட்சிக்குள்ளாக கொண்டு வரும், அவரது செயல்பாட்டின் மூலம் புதிய விஷயங்கள் கட்சிக்கு கிடைக்கும் எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக மாநில தலைவராக பொறுப்பேற்று இருப்பது நல்ல விஷயமாக பார்க்கின்றோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடித்து சவால் விட்ட துரைமுருகன்..! திமுகவுடன் கைகோர்த்த பாஜக..!

மாநில தலைவர் வாய்ப்பு தவறிவிட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், இந்தி தெரியாத ஒரு பெண்மணியை தேசிய மகளிர் அணி தலைவராக்கி இருக்கின்றனர். மத்திய தேர்தல் குழுவிலும் எனக்கு இடம் கொடுத்து இருக்கின்றனர் எனவும், பல்வேறு விடயங்களை மனதில் வைத்து கட்சி பொறுப்புகள் கொடுக்கப்படும் எனவும் அதனால் வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம் என்றில்லை, இதை விட வேறு வாய்ப்புகளை கட்சி கொடுத்து இருக்கின்றது என தெரிவித்தார். எம்.எல்.ஏ வாகவும் ஆக்கி இருக்கின்றது எனவும் எங்களை பொறுத்த வரையில் தமிழகத்தில் பா.ஜ.க வளர வேண்டும் என்பதுதான் , மாநில தலைவர் வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம், ஏமாற்றம் என்ற எண்ணம் ஒரு சதவீதம் கூட இல்லை என தெரிவித்தார்.

முதலில் பா.ஜ.கவுடன் கூட்டணியே அமையாது என சொன்னார்கள், ஆனால் அமித்ஷா வழிகாட்டுதலில் கூட்டணி சிறப்பாக செயல்படும், திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவது என்ற ஓர் இலக்கை நோக்கி இந்த கூட்டணி பயணிக்கின்றது எனவும் தெரிவித்தார். கூட்டணி ஆட்சி அமைப்போம் என அமித்ஷா சொல்கின்றார், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை சொல்லவில்லையே என்ற கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கி இருக்கிறது, முதலில் இந்த கூட்டணியின் வேலை 2026 தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைப்பதுதான், கூட்டணி ஆட்சி அமைப்பது என்பது குறித்து எங்கள் தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பக்தர்கள் இப்படி தான் இறந்தாங்க.. காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!