ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலால் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்தும் தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். மக்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. உதம்பூர் மாவட்டம் பாசன்கார்க் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பதிலுக்கு பதில்..! சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை..! ஆக்ஷனில் இறங்கிய பாதுகாப்பு படை..!

இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெஞ்சை உலுக்கிய தீவிரவாத தாக்குதல் சம்பவம்..! காஷ்மீரில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!