கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஏப்ரல் 4ம் தேதி குட முழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. தமிழ்க் கடவுளான முருகனின் கோவிலில் குட முழுக்கின் போது, தமிழில் மந்திரங்கள் ஓத அனுமதி கோரி, உப்பிலிபாளையத்தை சேர்ந்த டி.சுரேஷ் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், குடமுழுக்கின் போது, வேள்வி குண்ட நிகழ்வுகளில் வேள்வி ஆசிரியராக தமிழ் சைவ மந்திரங்கள் ஓதுவதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி அறநிலைய துறைக்கு மனு அளித்ததாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரியாணிக்காக கைதான இருவர்... கோவையில் நடந்த வினோத சம்பவம்!!
தமிழில் குட முழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாசாணி அம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்பட மாட்டாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!