இந்த ஆண்டு நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவும் குளிரும் வாட்டி எடுத்தன. இதனால் சாலை ஓரத்தில் படுத்து தூங்கிய வீடற்ற ஏழை, எளியவர்கள் 474 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 56 நாட்களில் இந்த உயிர் பலி நடந்திருக்கிறது.

இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வந்து இருப்பதை தொடர்ந்து, அது குறித்து விளக்கமான அறிக்கையை அனுப்பும்படி டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரி டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானே முன்வந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க: 500 தொழில் அதிபர்களுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: மோடி அரசு மீது, கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"டெல்லியில் வீடு இல்லாத ஏராளமான ஏழை எளியவர்கள் சாலை ஓரத்தில் படுத்து தூங்கி வருகிறார்கள். டெல்லியில் கடுமையான குளிர் ராட்டி எடுத்ததால், கடந்த 56 நாட்களில் அவர்களில் 474 பேர் பலியாகி விட்டனர்.

தொண்டு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது. குளிரை சமாளிக்க தேவையான வசிப்பிடங்கள் இல்லாததும், குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள போர்வை போன்ற ஆடைகள் இல்லாததுமே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

பலியானவர்களில் 80 சதவீதம் பேர் அளவுக்கு வீடு இல்லாதவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் உண்மையானால் இது அப்பட்டமான மனித உரிமைகள் மீறல் ஆகும்"என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கம் அளிக்கும்படி டெல்லி மாநில தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரி (டிஜிபி) ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் கடும் குளிர் காரணமாக தெருவோர ஏழைகளுக்கு சுவாசக் கோளாறு போன்ற குளிர்கால நோய் பாதிப்புகளும் ஏற்பட்டிருப்பதாகவும் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது
இதையும் படிங்க: 'அரசியலில் இது புதுசு' : "உருவ பொம்மை எரிப்பு"க்குப் பதிலாக, கெஜ்ரிவால் "கட் அவுட்"டை ஆற்றில் மூழ்கடிக்கும் போராட்டம்