மத்திய பிரதேச மாநிலத்தில், பாஜக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனையில் ஏராளமான கருப்பு பண ஆவணங்களுடன் உண்மையான நான்கு முதலைகளும் சிக்கி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பாஜகவை சேர்ந்த முன்னாள் எம் எல் ஏ ஹர்வன்ஷ் சிங் ரத்தோர். 150 கோடி ரூபாய் அளவிற்கு வரியைப்பு செய்த வழக்கில், பீடி மற்றும் கட்டுமான தொழிலதிபர் ராஜேஷ் கேஷர்வானிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனைகளைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ ரத்தோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. தொழிலில் பங்குதாரர்களாக இருந்த ரத்தோரின் சகோதரர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கம் மற்றும் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
இதையும் படிங்க: 'அந்த கைத்தடியா..? இந்தத் துப்பாக்கியா..? திராவிட பெரியாரை வீழ்த்தாமல் விடமாட்டேன்..!' மீண்டும் சினம் கொண்டு சீறும் சீமான்..!
பினாமி சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கன. இந்த சோதனையில் மொத்தம் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அவர்களுக்கு இருந்தது தெரியவந்தது. 14 கிலோ தங்கம் மற்றும் நான்கு கோடி ரூபாய் ரொக்க பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையில் எதிர்பாராமல் தெரிய வந்த விசேஷம் என்னவென்றால், முன்னாள் எம்எல்ஏ ரத்தோரின் குடியிருப்பு வளாகத்தின் அருகே இருந்த சிறிய குளத்தில்
4 முதலைகள் வளர்க்கப்பட்டது தான். வனத்துறை அதிகாரிகள் அந்த முதலைகளை கைப்பற்றி வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருப்பதாக மாவட்ட தலைமை வனத்துறை தலைவர் அசின் ஸ்ரீவஸ்தவா கூறியிருக்கிறார்.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்ற அனுமதியுடன் முதலைகளை அணையில் விட்டு விடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.தொடக்கத்தில் ஐடி சோதனையில் முதலைகள் பிடிபட்டது பற்றிய படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வந்தது. ஆனால் ரத்தோர் குடும்பத்தினர் இதை மறுத்து வந்தனர். நீண்ட காலத்திற்கு முன்பாகவே அந்த முதலைகளை கோவில் பூசாரிகளுக்கு நன்கொடையாக வழங்கி விட்டதாக அவர்கள் கூறியிருந்தனர். அத்துடன் இந்த முதலைகளை அகற்றுமாறு வனத்துறையினருக்கு ஏற்கனவே பலமுறை கடிதம் எழுதி உள்ளதாகவும் ரத்தோர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் அவர்கள் இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்ததை வனத்துறை வட்டாரங்களும் உறுதி செய்தன. "இதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் குளம் யாருக்கு சொந்தம் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக இந்த முதலைகளை மாற்றும்படி வனத்துறையிடம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தால் அதற்கான பொறுப்பு வனத்துறைக்கு தான் உள்ளது" என்றும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார். வனத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: உடல் உறுப்புகள் தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் விடுமுறை: மத்திய அரசு அனுமதி..!