அந்தக் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் இன்று ராஜினாமா செய்தார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவரும், கிங்மேக்கர் என்று கூறப்பட்டவரான விஜய்சாய் ரெட்டி திடீரென அரசியலிருந்து விலகியது, அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
லுக் அவுட் நோட்டீஸ்

ஆந்திராவில் தற்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன், ஆந்திர பிரதேச சிஐடி, விஜய் சாய் ரெட்டி, ஒய்எஸ்ஆர்சிபி எம்.பி. சுபாரெட்டி மகன் ஒய் விக்ராந்த் ரெட்டி, அரவிந்தோ பார்மா சரத் சந்திர ரெட்டிக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
காக்கிநாடா சீபோர்ட்ஸ்(கேஎஸ்பிஎல்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், இயக்குநரான கர்நாதி வெங்கடேஷ்வர ராவ் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இவர்கள் மீது முதல்தகவல் அறிக்கையை சிஐடி பதிவு செய்தது. எஸ்பிஎல் நிறுவனத்தை வலுக்கட்டாயமாக வாங்க இவர்கள் முயல்கிறார்கள், இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி துணையாக இருக்கிறார் என கர்நாதி வெங்கடேஷ்வர ராவ் புகார் அளித்திருந்தார். ஆந்திரப்பிரதேச அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து வருகிறது என ஜெகன்மோகன் ரெட்டியும் பேசியிருந்தார்.
இந்த சம்பவம் நடந்து இரு மாதங்களுக்குள் விஜய் சாய் ரெட்டி அரசியலில் இருந்து விலகுவதாகவும், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த விஜய்சாய் ரெட்டி
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்வரை அந்தக் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே பாலமாகவும், நட்பு அடிப்படை உறவாகவும் விஜய் சாய் ரெட்டி இருந்தார்.
கடந்த 1980ம் ஆண்டிலிருந்து ஒய்எஸ்ஆர் குடும்பத்துக்கு மிகுந்த நெருக்கமாக இருந்து வந்த விஜய்சாய் ரெட்டி, ஜெகன்மோகன் ரெட்டிக்கு நம்பிக்கைக்குரியவர். விஜய்சாய் ரெட்டி கணக்குத் தணிக்கையாளராக பல நகரங்களில் பணியாற்றிய நிலையில் ஜெகனின் தந்தை மறைந்த ராஜசேகர ரெட்டி அழைப்பின் பெயரில் அரசியலுக்கு விஜய்சாய் ரெட்டி வந்தார்.
ராஜசேகர ரெட்டி குடும்பத்துக்கு நிதி ஆலோசகராகவும், குறிப்பாக ஜெகன் மோகன் செய்து வந்த பல்வேறு தொழில்கள், நடத்திய நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் விஜய்சாய் ரெட்டி இருந்தார். 2006ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் ரெட்டி, திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் தலைவராக விஜய்சாய் ரெட்டியை இருமுறை நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெலிகாப்டர் விபத்தில் ஒய்எஸ்ஆர் ரெட்டி மறைவுக்குப்பின் 2009லிருந்து ஜெகனுக்கு மிகநெருக்கமானவராக விஜய்சாய் ரெட்டி இருந்துவந்தார். ஜெகன்மோகன் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் சந்தித்த பல்வேறு சிக்கல்கள், பிரச்சினையின்போது பக்கபலமாக விஜய்சாய் இருந்தார்.
இதையும் படிங்க: அச்சத்தில் புனே மக்கள்! அரிதான நோய்எதிர்ப்பு நரம்பு கோளாறால் இதுவரை 73 பேர் பாதிப்பு

வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் 2012ம் ஆண்டு சிபிஐ, ஜெகன் மற்றும் விஜய்சாய் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் விஜய்சாய் 2013ம் ஆண்டு ஜாமீனில் வந்தார். அப்போது விஜய்சாய் ரெட்டியை அரசியல் தந்திரக்காரர், கூர்மையான அரசியல் ஞானம் உள்ளவர் என அந்தக்கட்சியின் தலைவர்களே புகழ்ந்தனர். 2019ம் ஆண்டு தேர்தலில் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமிக்க ஜெகன்மோகன் ரெட்டிக்கு அழுத்தம் கொடுத்து நியமித்ததும் விஜய்சாய் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டு ஒரு பொதுநிகழ்ச்சியில் பிரதமர் மோடியை சந்தித்த விஜய்சாய் ரெட்டி திடீரென அவர் காலில் விழுந்ததும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை நேரில் சந்தித்துப் பேசியதும் மிகப்பெரிதாகப் பேசப்பட்டது. இந்த சம்பவத்துக்குப்பின்புதான் தேசிய அரசியலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மறைமுக நெருக்கத்தை ஏற்படுத்தின. பாஜகவுக்கும், ஜெகன் மோகனுக்கும் நட்புப்பாலமாக செயல்பட விஜய்சாய் இருந்தார்.

அரசியலைவிட்டு விலகுகிறேன்
விஜய்சாய் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஜனவரி 25ம் தேதி நான் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்வேன். எந்த பண, அதிகார ஆதாயத்துக்காக நான் ராஜினாமா செய்யவில்லை. என் முடிவு தனிப்பட்டது. எந்த அழுத்தமும், தாக்கத்தாலும் இந்த முடிவை நான் எடுக்கவில்லை.நான் ஒய்எஸ்ஆர் குடும்பத்துக்கு கடமைப்பட்டுள்ளேன், ஏனென்றால் கடந்த 40 ஆண்டுகளாக எனக்கு அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர், 3 தலைமுறைகளாக பழக்கம், நட்பு இருக்கிறது.
ஜெகன் அய்யாவுக்கும் குறிப்பாக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், மாநிலங்களவை எம்.பியாக என்னை இருமுறை அனுப்பினார். அரசியலில் பெரிய உச்சத்துக்கு செல்ல பரத்தம்மா உதவி செய்தார்.
நாடாளுமன்றக் குழுத் தலைவராக, மாநிலங்களவையில் கட்சித் தலைவராக, தேசிய பொதுச்செயலாளராக பல பதவிகளில் இருந்துள்ளேன். இரவுபகலாக, களைப்பின்றி, விசுவாசத்தோடு கட்சியின் நலனுக்காகவம், மாநிலத்தின் நலனுக்காகவும் கட்சிப்பணி செய்துள்ளேன். ஆந்திர மாநிலமும் மத்திய அரசும் இணக்கமாகச் செல்ல நான் பாலமாக இருந்தேன், அதிகபட்சமான நலன்களை பெற்றுக்கொடுத்துள்ளேன்.
என்னுடைய அரசியல் பயணத்தில் உதவிய, ஆதரவு அளித்த கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றி. பிரதமர் மோடிக்கு என் இதயம்கனிந்த நன்றிகள், அமித் ஷாவுக்கும் நன்றி. சந்திரபாபுநாயுடு குடும்பத்தாருடன் எந்த பிரச்சினையும் இல்லை, பவன் கல்யாணுடன் என்னுடைய நட்பு எப்போதும் தொடரும்” எனத் தெ ரிவித்தார்
இதையும் படிங்க: அக்கா குழந்தையை ஏமாற்றி விற்ற காசில் பல்சர் பைக்... மனைவியுடன் உல்லாசமாக சுற்றிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்!