பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 5 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. அதில், சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் விசா பெற்று பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த நிலையில், பாகிஸ்தானியரகள் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணி நேரம் மட்டுமே காலக்கெடு கொடுக்கப்பட்டது.

காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதன் எதிரொலியாக மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகின்றனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிகளை எதிர்த்து துப்பாக்கிச்சூடு..! ராணுவ வீரர் உயிர் தியாகம்..!
இதையும் படிங்க: பதிலுக்கு பதில்..! சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை..! ஆக்ஷனில் இறங்கிய பாதுகாப்பு படை..!