கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டத்தை பெண் ஒருவர், ஹூப்ளி மாவட்டத்தில் அழகு நிலையம் ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரது 5 வயது மகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்றார்.இதனையடுத்து, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்த நிலையில், போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுமி கடத்திச் செல்லப்பட்ட இடங்களை போலீசார் ஆய்வு செய்த நிலையில் அருகிலிருந்த கட்டடம் ஒன்றில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, அந்த சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுமியை கடத்திச் சென்றவர் பீஹார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த நிதேஷ் குமார் என்பதி கண்டு பிடித்தனர். விசாரணையில், சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்து நிதேஷ் குமார் தொல்லை கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: கர்ப்பிணி பசுவுக்கு வளைகாப்பு..! விருந்து வைத்து கொண்டாடிய தொழிலதிபர்..!

சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று நிதேஷ் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, போலீசாரை தாக்கிவிட்டு நிதேஷ்குமார் ஓட முயன்றதாக தெரிகிறது. இதனையடுத்து வானத்தை நோக்கி போலீசார் பாதுகாப்புக்காக சுட்டுள்ளனர். இருப்பினும், நிதேஷ்குமார் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நிதேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் துருதிஷ்டவசமானது என கூறினார். இச்ம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சிறுமியின் தாயாருக்கு உரிய இழப்பீடு வழங்க மாநில அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: டீசலுக்கான விற்பனை வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு.. கர்நாடக அரசு அமல்..!